செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

அவசரப்பட்டு ரிட்டயர்மென்ட் அறிவித்த ஷிகர் தவான்.. இடதுகை ரோகித் சர்மா என்று நிரூபித்த கபார் பாய்

கடந்த மாதம் 24 ஆம் தேதி அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து 38 வயது நிரம்பிய, இந்திய அணியின் ஓப்பனர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஓய்வு முடிவை அறிவித்தார். இந்தியாவிற்காக இவர் 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

எப்பொழுதுமே ஐசிசி நடத்தும் போட்டி என்றால் சிறப்பாக விளையாடும் தவான் அடுத்து வரும் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். ரோகித், விராட் கோலி, தவான் மூன்று பேருக்கும் வயது வித்தியாசங்கள் பெரிதும் இல்லை.

சுபம் கில், எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் வருகையால் இந்திய அணியில் தவானின் இடம் கேள்விக்குறியானது. 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களம் இறங்கினார் தவான். கிட்டத்தட்ட 12 ஆண்டு காலம் இந்திய அணிக்காக விளையாடினார்.

இடதுகை ரோகித் சர்மா என்று நிரூபித்த கபார் பாய்

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் விளையாடியதே இவருக்கு கடைசி போட்டியாக அமைந்தது. ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட ஆறு அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார். ஷிகர் தவான் தற்போது லெஜன்ட் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் அணிக்காக விளையாடிவரும் இவர் அங்கே பட்டாசு போல் வெடிக்கிறார்.

வயதானாலும் நான் இடதுகை ரோகித் சர்மா என தன்னை நிரூபித்து வருகிறார். தினேஷ் கார்த்திக் தலைமையில் களம் இறங்கிய சதன் சூப்பர் ஸ்டார் அணிக்கு எதிராக ஷிகர் தவான் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்துள்ளார். தனி ஒரு ஆளாக இருந்து 48 பந்துகளில் 52 ரன்கள் அடித்துள்ளார். வயதானாலும் நான் சிங்கம் தான் என நிரூபித்துள்ளார் கபார் பாய், இவரை இந்திய அணியில் செல்லமாக அப்படித்தான் அழைப்பார்கள்.

- Advertisement -spot_img

Trending News