ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

முற்றிய பனிப்போர்.. குட்ட குட்ட குனிய முடியாது விராத் கோலி மீது பாயும் டெஸ்ட் வீரர்.

கடந்த சில மாதங்களாகவே இந்திய அணிக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ, காரணம் இந்தியாவின் தொடர் தோல்விகள். அணியில் கேப்டன் பதவியை மாற்றியது, சரியாக விளையாடாத வீரர்களை அணியில் இருந்து நீக்கியது என பல மாறுதல்கள் இந்திய அணியில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு காரணம் சீனியர் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என விராட் கோலி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அதற்கு சீனியர் வீரர்கள், விராட் கோலி போட்டி முடிந்த பின்னர் வேறு உலகத்துக்கு சென்று விடுகிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் எங்கள் குறைகளைத் திருத்திக் கொள்ள முடியவும் இல்லை என பதிலுக்கு குற்றம்சாட்டினார்.

இதையெல்லாம் மனதில் வைத்து பிசிசிஐ, கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை தூக்கியது. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நியமித்து, அவரது பணிச்சுமையை குறைந்ததாக அறிவித்தது.

ஆனால் உண்மையில் விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே கங்குலி மற்றும் கோலி இடையே நல்ல ஒரு புரிதல் இல்லை. விராட் கோலி அவர் விரும்பியவாறே இந்திய அணி வேண்டும், பயிற்சியாளர் வேண்டும், அவர் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆணவத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சௌரவ் கங்குலி அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இப்பொழுது சீனியர் வீரரான ரஹானே, எனக்கு விளையாட தெரியவில்லை என விராட் கோலி கூறிவருகிறார். அப்படி என்றால் அவருக்கு கிரிக்கெட்டே தெரியவில்லை என்று அர்த்தம். ரோகித் சர்மா நல்ல கேப்டன். அவரே இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என ரஹானே கூறியுள்ளார். இதிலிருந்து அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருப்பது தெளிவாக தெரிய வருகிறது.

Trending News