புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தூக்கி வளர்த்து விட்டவருக்கே வில்லனாகும் சிம்பு.. மன்மத வேலையை விட்டு வேற ரூட்டில் பயணிக்கும் STR

Simbu acting Kamal’s villain in Thug Life movie: மணிரத்தினம் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் உருவான “நாயகன்” எவர்கிரீன் கேங்ஸ்டர் மூவியாக இன்றுவரை சினிமா ஆர்வலர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது மறுக்க முடியாத ஒன்று.  

இதே கூட்டணி  கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பின்பு தக் லைஃபில் ஒன்றிணைந்துள்ளது. கமலுடன் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். 

கடந்த ஆண்டு வெளியான அறிமுக வீடியோவையே திரும்பத் திரும்ப பார்க்க வைத்து ஹைப்பை எகிற வைத்தது இந்த தக்லைஃப். அந்த அளவிற்கு மிரட்டி இருந்தார் ரங்கராய சக்திவேல் நாயக்கன். 

பலரையும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் இதில் கமல் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு வில்லனாக துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் இணைய உள்ளதாகவும் பரவிய தகவல் கேரளா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

தக் லைஃப் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்பு

சமீபத்தில் மல்டிஸ்டார்ஸ் படத்தில் நடிப்பதால் இமேஜ் பாதிக்கப்படுவதாக நினைத்து கால்ஷீட் பிரச்சனையே காரணமாக்கி இந்த பொன்னான வாய்ப்பை மறுத்துவிட்டார் துல்கர் சல்மான்.

இதனைஅடுத்து கமல் ஏற்கனவே சிம்புவை வைத்து தயாரிக்க இருந்த STR48 படம் தாமதமாவதால் துல்கர் சல்மானின் வேடத்திற்கு சிம்புவை சிபாரிசு செய்துள்ளார். மணிரத்தினமும் ஓகே சொல்ல, தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் கலெக்டர் வேடத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.

ரஜினி மற்றும் கமல் இவர்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு எளிதில் அமைவதில்லை. அது திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் அந்த வாய்ப்பு தற்போது சிம்புவுக்கு கிடைத்துள்ளது. 

காதல், கிசுகிசு என மன்மத வேலையை செய்து கொண்டிருந்த சிம்பு தக்லைஃப் திரைப்படத்தின் மூலம் ஸ்மார்ட் வில்லனாக தரமான சம்பவம் செய்ய காத்துள்ளார்.

படம் வேற லெவல்ல ஹிட்டாகி காலத்திற்கும் பேசப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Trending News