சிவகார்த்திகேயனை ஃபாலோ பண்ணும் சிம்பு, தனுஷ்.. சம்பள விஷயத்தில் சண்டை போடும் ஹீரோக்கள்

Sivakarthikeyan: ரஜினியை சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்கிறார் என்ற காலம் போய் இப்போது மற்ற நடிகர்கள் சிவகார்த்திகேயனை பின்பற்றி வருகிறார்கள். சின்னத்திரையில் இருந்து வந்தாலும் திறமையால் மிகப்பெரிய வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணம் தான் சிவகார்த்திகேயன்.

இதனால் பல சின்னத்திரை நடிகர்கள் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்து வருகிறார்கள். மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய வசூலையும் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து இப்போது பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய படங்கள் சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கிறது. இந்த சூழலில் இப்போது ஒரு படத்திற்கு சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளம் கேட்கிறார்.

சிவகார்த்திகேயனை பார்த்து சம்பளம் உயர்த்தி கேட்கும் சிம்பு மற்றும் தனுஷ்

அதனால் சிம்பு மற்றும் தனுஷும் இப்போ வந்த சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளம் கேட்பதால் அதற்கு முன்னால் நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசுகிறார்களாம்.

இது குறித்து பேசிய திருப்பூர் சுப்ரமணியன் படங்களில் தான் போட்டியிருக்க வேண்டும். ஆனால் ஹீரோக்கள் சம்பளத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.

அதேபோல் சிம்புவும், தனுஷும் நாங்கள் நான்கு படம் ஹிட் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். தயாரிப்பாளரிடம் நல்ல இயக்குனரை தேர்ந்தெடுத்து நல்ல சம்பளத்தில் நடிக்கிறோம் என்று சொல்லாமல் சிவகார்த்திகேயன் பார்த்து போட்டி போடுவதாக கூறியிருக்கிறார்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்