Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Simbu: சிம்புவுக்கு வர்ற படத்தை எல்லாம் தட்டிப்பறிக்கும் 2 ஹீரோக்கள்.. கமலால் கேரியருக்கு வந்த ஆபத்து

Simbu: சிம்புவுக்கு வர்ற படத்தை எல்லாம் தட்டிப்பறிக்கும் 2 ஹீரோக்கள்.. கமலால் கேரியருக்கு வந்த ஆபத்து

Actor Simbu: சிம்பு நடிப்பில் கடந்த வருடம் பத்து தல படம் வெளிவந்தது. அதன் பிறகு கமல் தயாரிப்பில் உருவாகும் 48வது படத்திற்காக இவர் பயிற்சி எடுத்து வந்தார். ஆனால் மாதங்கள் தான் கடந்ததே தவிர படத்தின் சூட்டிங் […]

Actor Simbu: சிம்பு நடிப்பில் கடந்த வருடம் பத்து தல படம் வெளிவந்தது. அதன் பிறகு கமல் தயாரிப்பில் உருவாகும் 48வது படத்திற்காக இவர் பயிற்சி எடுத்து வந்தார்.

ஆனால் மாதங்கள் தான் கடந்ததே தவிர படத்தின் சூட்டிங் ஆரம்பித்த பாடில்லை. கடைசியாக சிம்புவின் பிறந்தநாள் பரிசாக படத்தின் போஸ்டரை கமல் வெளியிட்டார்.

வரலாற்று படமாக உருவாகும் இதில் சிம்பு இரு வேடங்களில் நடிக்கிறார். இதுவே ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் இன்னும் சூட்டிங் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த கேப்பில் இவருக்கு வர வேண்டிய படங்களை எல்லாம் ஜிவி பிரகாஷ், பிரதீப் ரங்கநாதன் இருவரும் தட்டிப்பறித்துக் கொள்கிறார்களாம். இதுதான் இப்போது கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.

கமலால் சிம்புவுக்கு வந்த சிக்கல்

அதாவது ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சிம்புவுக்காக ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அது ரொம்பவும் பிடித்து போனதால் சிம்புவும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் என சொல்லி இருக்கிறார்.

அதை நம்பி இயக்குனரும் ஒரு வருடம் காத்திருந்தது தான் மிச்சம். சிம்புவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கு காரணம் கமல் படத்தில் அவர் சிக்கியிருப்பது தான்.

அதனால் அஸ்வத் இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து இந்த படத்தை ஆரம்பிக்க இருக்கிறாராம். அதேபோல் சிம்புக்காக உருவான ஒரு கதையும் ஜிவி பிரகாஷ் பக்கம் சென்றிருக்கிறது.

இப்படி கமலால் சிம்புவின் முகத்தையே ரசிகர்கள் மறந்து விடுவார்கள் போல. அந்த அளவுக்கு பெரிய பிரேக் விழுந்துவிட்டது. எல்லாம் ஆண்டவருக்கே வெளிச்சம்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.