புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலுக்கு செக் வைக்கும் சிம்பு.. மண்டையை பிய்த்துகொள்ளும் மணிரத்தினம்!

Kamal and Simbu: விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கமல் மின்னல் வேகத்தில் அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் பண்ணுவார் என்று எதிர்பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. விக்ரம் படம் வந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இப்பொழுது வரை எந்த படமும் வெளிவரவில்லை.

ஆனால் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதாவது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பிரபாஸ் நடித்துக் கொண்டிருக்கும் கல்கி படத்தில் வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே எப்பொழுது வெளிவரும் என்று தெரியாத நிலையில் தான் இருக்கிறது.

இதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதில் இவருடன் சேர்ந்து முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் கமிட்டாகி இருந்தார். ஆனால் துல்கர் சல்மான் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இதற்கு நேரத்தை செலவழிக்க முடியாது என்று விலகி விட்டார்.

பிறகு இவருக்கு பதிலாக சிம்புவை நடிக்க வைக்கலாம் என்று மணிரத்தினம் முடிவெடுத்தார். ஆனால் கமல் வேண்டாம் அவர் வந்துவிட்டால் சூட்டிங் ஒழுங்கா போகாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு மணிரத்தினம் நான் சொன்னா சிம்பு கேட்பார் என்று சொல்லி கமலை சமாளித்து விட்டார்.

படத்தில் இருந்து பின்வாங்கும் சிம்பு

இப்படத்தில் கமலுக்கு மூன்று கெட்டப் இருக்கிறதாம். அதில் ஒரு கெட்டப்பில் கமல் வரும்போது அவருடன் சேர்ந்து சிம்பு நடிப்பதாக காட்சிகள் இருக்கிறது. அதிலும் கமலுக்கு வில்லனாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் சிம்பு இப்படத்தில் இருந்து நடிப்பதற்கு பின் வாங்குகிறார்.

அதற்கு என்ன காரணம் என்றால் சிம்பு நடிக்கும் காட்சிகள் கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறதாம். இதனால் சிம்பு நான் கமலுடன் நடிக்க தயார். ஆனால் கமலுடன் படம் முழுவதும் ட்ராவல் பண்ற மாதிரி காட்சிகள் இருந்தால் சொல்லுங்க. இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

தற்போது கமல் சொன்ன மாதிரியே சிம்பு எடுத்த முடிவால் சூட்டிங் ஆரம்பிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. மேலும் சிம்புக்கு பதில் வேற யாரையும் போட்டாலும் நல்லா இருக்காது என்று மணிரத்தினம் தற்போது மண்டையை பிடித்துக் கொண்டு புலம்பி தவிக்கிறார்.

ஒருவேளை சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறேன் என்று கமல் வாக்குறுதி கொடுத்த நிலையில் அதை அப்படியே டீலில் விட்டதற்காக சிம்பு இப்படி பழி வாங்குகிறாரோ என்னமோ. ஆக மொத்தத்தில் கமல் படம் இப்போதைக்கு வருவதாக இல்லை.

Trending News