Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மணிரத்னத்தால் அழுத சிம்பு.. தேற்றிய டி ஆர்

மணிரத்னத்தால் அழுத சிம்பு.. தேற்றிய டி ஆர்

Simbu : சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார். சிம்புவின் மார்க்கெட் அவ்வளவு தான் இனி அவர் சினிமாவில் நடித்தாலும் படங்கள் வெற்றி பெறாது என்ற விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து மாநாடு, வெந்து […]

Simbu : சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார். சிம்புவின் மார்க்கெட் அவ்வளவு தான் இனி அவர் சினிமாவில் நடித்தாலும் படங்கள் வெற்றி பெறாது என்ற விமர்சனங்கள் வந்தது.

ஆனால் அதையெல்லாம் முறியடித்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த சூழலில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிம்பு சில விஷயங்களை பேசி இருந்தார். அதாவது மணிரத்னம் தன்னை அஞ்சலி படத்தில் நடிக்க கூப்பிடவில்லை என சிம்பு அப்போது அழுதாரம். அஞ்சலி படத்தில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மணிரத்னத்தால் அழுத சிம்பு

தருண், ஷாமிலி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சினிமாவில் தானும் இருந்தேன் என்னை ஏன் அதில் நடிக்கவில்லை என டி ஆர் இடம் சொல்லி சிம்பு அழுதாரம். அப்போது அவரது தந்தை ஆறுதல் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு மணிரத்னம் படத்தில் வாய்ப்பு கிடைக்காது என்ற சிம்பு நினைத்திருந்தாராம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது தான் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க மணிரத்னம் அழைத்தார். அதை தன்னால் மறக்க முடியாது என்றும் சிம்பு பேசியிருக்கிறார்.

அதோடு இப்போது முதல்முறையாக கமலுடன் நடிக்கும் வாய்ப்பையும் மணிரத்னம் கொடுத்திருக்கிறார். அதுவும் திரையில் கமல் மற்றும் சிம்பு இருவரும் மோதிக் கொள்ளும் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. தக் லைஃப் படம் பெரிய அளவில் பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.