வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தனுஷ் மார்க்கெட்டை சரிக்க போட்ட ஸ்கெட்ச்.. ஆபத்தை உணர்ந்து நட்பை பிரித்த சிம்பு

60, 70களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. இவர்களுக்கு அடுத்தபடியாக ரஜினி, கமல் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். அதன்பின் விஜய், அஜித் என நடிகர்கள் இடையே போட்டி நிலவியது. இதற்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் போட்டியாக பார்க்கப்படுவது தனுஷ் மற்றும் சிம்பு தான்.

இவர்கள் இருவரும் தொடர்புடைய பல செய்திகள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் ஒரு சமயத்தில் சிம்புவின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் சிம்புவின் மார்க்கெட் இழந்துவிடும் என்ற அபாயம் ஏற்பட்டது. அப்போது தனுஷின் படங்கள் தொடர் வெற்றியை தந்து முன்னணி நடிகராக வலம் வர தொடங்கினார்.

அப்போது பொல்லாதவன் படத்தில் தனுஷுடன் இணைந்து சந்தானம் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியது. இதையடுத்து தனுஷின் 3 மற்றும் மயக்கம் என்ன படங்களில் சந்தானம் நடிப்பதாக இருந்தது.

ஆனால் தனுஷ், சந்தானம் கூட்டணியில் படம் வெளியானால் நிறைய ஹிட் படங்கள் கொடுப்பார்கள் என சிம்பு யோசித்து உள்ளார். சிம்பு, சந்தானத்துடன் மன்மதன் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இதனால் சந்தானத்தை நீங்கள் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என சந்தானத்திற்கு ஆசையை கிளப்பிவிட்டுள்ளார் சிம்பு.

இதனால் சந்தானமும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சந்தானம் காமெடியனாக இருந்தபோது வருடத்திற்கு பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். ஆனால் ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஆனால் தனுஷ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் சிம்பு, தனுஷை பழி வாங்குவதாக நினைத்து சந்தானத்தை பழி வாங்கி உள்ளார். தற்போது இதுபோன்ற பேச்சுகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் தனது வெற்றிப் பாதையை தேடி செல்கிறார் சிம்பு.

Trending News