புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சும்மா இருந்த வாய்க்கு வெத்தல கொடுத்த எஸ் டி ஆர்.. அடுக்கடுக்காய் சிம்பு கொடுத்த ஹட்ரிக் தோல்விகள்

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் புதிய படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய விமர்சனத்தை பார்த்துவிட்டு தான் பல ரசிகர்கள் படத்தை பார்க்க செல்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் பத்து தல படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் பத்து தல படத்தை தனது யூடியூப் சேனலில் வச்சி செய்திருந்தார். சிம்புவின் விடுதலை படத்திற்கு மறுநாள் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான விடுதலை படம் வெளியாகி இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி திரை பிரபலங்கள் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனை பாராட்டி வருகிறார்கள். இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் போட்டு ட்வீட் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. அதாவது சூரியுடன் மோதி சிம்பு தோற்று விட்டதாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பந்தயத்தில் பத்து தலயை தோற்கடித்து விடுதலை ஜெயித்துவிட்டது.

மேலும் சிம்பு அடுக்கடுக்காய் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருவதாக ப்ளூ சட்டை மாறன் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது மகா, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என ஹாட்ரிக் தோல்வியை சிம்பு தந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் சிம்பு ஸ்டைலிஷ் ஹீரோ என்பதை நிரூபித்த உள்ளார்.

ஆனால் உண்மை முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது. இவ்வாறு சிம்புவை ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றி உள்ளார். இந்த பதிவின் கீழ் சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கமெண்ட்களால் விளாசி வருகிறார்கள். அதாவது விடுதலை வெற்றிக்கு சூரி காரணம் இல்லை, வெற்றிமாறன் என்ற மாபெரும் இயக்குனர் தான் காரணம்.

மேலும் சிம்பு மாநாடு என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் வெற்றி தான். அப்படி இருக்கையில் எப்படி சிம்பு தொடர் தோல்வி படங்கள் கொடுத்துள்ளார் என்று சொல்லலாம் என திட்டி தீர்த்து வருகிறார்கள் சிம்பு ரசிகர்கள்.

Trending News