Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கமலின் மவுசு குறைந்துவிட்டதா.. சிம்புக்கு கிடைத்த கைதட்டல்

கமலின் மவுசு குறைந்துவிட்டதா.. சிம்புக்கு கிடைத்த கைதட்டல்

Kamal : கமல் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இப்படம் ஜூன் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. சில நாட்களாகவே படத்தின் ப்ரோமோஷனை படக்குழு தொடங்கிவிட்டது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு […]

Kamal : கமல் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இப்படம் ஜூன் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. சில நாட்களாகவே படத்தின் ப்ரோமோஷனை படக்குழு தொடங்கிவிட்டது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கமல் பேசியதை விட சிம்பு பேசும்போது தான் அரங்கத்தில் கைதட்டல்கள் கிடைத்தது. இந்த சூழலில் கமலுக்கு தற்போது மவுசு குறைந்து விட்டதா என்ற ஒரு விவாதம் நடந்து வருகிறது. இதுகுறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பொதுவாகவே பெரிய படங்களில் ஆடியோ லான்ச் என்பது நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்ற இடங்களில் தான் நடக்கும். ஆனால் தக் லைஃப் படத்தின் ஆடியோ லான்ச் ஒரு கல்லூரியில் நடந்தது. அதில் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் சிம்புவுக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கமலை விட சிம்புக்கு அதிக கைதட்டல் பெற காரணம்

அதுமட்டுமல்லாமல் எப்போதும் சிம்பு தனது ரசிகர் மன்றத்திற்காக சில டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுப்பது வழக்கம். ஆனால் கமல் இப்போது அரசியலில் இறங்கி உள்ளதால் இது போன்ற வேலைகளை வைத்துக் கொள்வது இல்லை.

மேலும் தக் லைஃப் படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் கமல். ஆகையால் இந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாக இருக்கும். ஆகையால் அவர் தனது ரசிகர் மன்றத்திற்காக டிக்கெட்டுகளை வாங்கி இருக்க மாட்டார்.

மேலும் கமல் பேசுவது தற்போது உள்ள தலைமுறைக்கு மிகுந்த கஷ்டம். கமல் போன்ற ஆட்கள் பேசுவதையே கேட்காத இவர்கள் கமல் பேசினால் எப்படி கேட்பார்கள். என்னதான் சினிமாவில் மேக்கப் போட்டுக் கொண்டு இளமையாக காட்டினாலும் வயது பேச்சில் காண்பித்து விடுகிறது என பிஸ்மி கூறியிருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.