புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலுடன் வைத்த கூட்டணியால் சிம்புவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அடுத்தடுத்து வரிசையில் இருக்கும் 3 படங்கள்

Simbu Upcoming Movies: சிம்பு நடித்த படங்கள் திரையரங்குகளுக்கு வருகிறதோ இல்லையோ சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி சர்ச்சைகள் மட்டும் வந்து கொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு தீராத விளையாட்டுப் பிள்ளையாக அசால்ட் தனத்தால் பல விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார். ஆனால் தற்போது மெச்சூரிட்டி வயசு வந்ததுக்கு அப்புறம் எல்லா சேட்டையும் சுருட்டி வைத்து விட்டார்.

அதனால் தற்போது ஓரளவுக்கு நல்ல பிள்ளையாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவருடைய 48வது படத்தில் நடிக்க கமிட்டானார்.

செகண்ட் இன்னிங்ஸில் தலைதூக்கி வரும் சிம்பு

ஆனால் திடீரென்று கமலுக்கு வந்த சந்தேகத்தின்படி சிம்புவுக்கு இவ்ளோ பெரிய வாய்ப்பை கொடுக்கவா? இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து விடக்கூடாது என்று யோசித்து சிம்புவின் 48வது படத்தை ஓரமாக ஒதுக்கி விட்டார். ஆனாலும் சிம்புவை அப்படியே கை விட்டால் அதுவும் பிரச்சினையாகி விடும் என்பதால் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து சமாதானப்படுத்தி விட்டார்.

இந்த நிலையில் சிம்புவின் 48வது படமாக தக் லைஃப் அமைந்துவிட்டது. ஆனாலும் தனிப்பட்ட ஹீரோவாகவும் ஜெயிக்க வேண்டும் என்பதினால் சிம்பு 49வது படத்திற்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார். அந்த வகையில் மலையாள இயக்குனராக இருக்கும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்புவின் 50 வது படத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு விட்டார். அந்த வகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து ஹிஸ்டாரிக்கல் படமாக கொடுப்பதற்கு தயாராகி விட்டார். இதுவரை இந்த மாதிரி ஒரு நடிப்பை சிம்பு இடம் இருந்து பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் ஆச்சரியப்படும் அளவிற்கு கதைகளத்துடன் இறங்கப் போகிறார்.

அந்த வகையில் சிம்புவின் 50 வது படம் மாபெரும் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதால் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தை கமல் தயாரிப்பாரா அல்லது வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் செகண்ட் இன்னிங்ஸில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று சிம்பு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்.

சிம்புவை வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்

Trending News