திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

அதிர்ஷ்டத்தை குத்தகைக்கு எடுத்த சிம்பு.. முக்கிய பதவியால் கொட்டும் பண மழை

விஜய் டிவியில் ஒளிபரப்பான 5 பிக் பாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய கமலஹாசன் ஒரு சிலர் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிய பிறகு அவருக்கு பதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அந்த இடத்தை பிடித்தார். இதற்காக சிம்பு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் படங்களில் நடிப்பதை விட பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் நிறைய படங்களை தன் வசம் வைத்திருக்கும் இந்த சூழலில், அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஆஹா என்ற ஓடிடி தளத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக சிம்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சிம்புவுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அத்துடன் மாநாடு படத்திற்குப் பின் சிம்புவின் ரேஞ்ச் எங்கேயோ சென்றுவிட்டது.

தற்சமயம் திரையரங்குகளை விட ஓடிடிக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டைலிஷ் ஹீரோவான அல்லு அர்ஜுன் தனக்கு சொந்தமாகவே தனி ஓடிடி தளத்தை உருவாக்கி, முதலில் தெலுங்கு படங்களை அதில் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

தற்போது அந்த நிறுவனம் தமிழில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளதால், இங்கு வெப்சீரிஸ் மற்றும் நேரடி திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இதைப்போல் தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டிற்கு பிறகான உரிமையையும் இந்நிறுவனம் பெரும் என்று கூறப்படுகிறது.

அதற்காக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான சிம்புவை இதற்கு பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததுடன் அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப் போகிறது. ஒருபுறம் கையில் இருக்கும் தமிழ் படங்கள், பிக் பாஸ் அதைத்தொடர்ந்து தற்போது கிடைத்திருக்கும் கிராண்ட் அம்பாசிடர் பதவி என சிம்புவுக்கு வரிசையாக அதிஷ்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.

படம் தோல்வி, காதல் தோல்வி என  இவ்வளவு நாள் சிம்புவை சமூகவலைதளங்களில் கேலி கிண்டல் செய்து கொண்டிருந்த நிலையில், அவரது இந்த திடீர் வளர்ச்சி சிலரை வாயடைத்துப் போக வைத்திருக்கிறது.

Trending News