வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

தயாரிப்பாளர்களை கோர்ட், கேஸ்னு சுத்தலில் விடும் சிம்பு.. காசுக்காக இறங்கி நடிச்ச விளம்பரம்

Actor Simbu:  சிம்புவின் அலும்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டு தான் போகிறது. அதாவது ஆரம்பத்தில் சிம்பு படக்குழுவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிறைய சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஆனால் மாநாடு படத்திற்குப் பிறகு மொத்தமாக தன்னை மாற்றிக்கொண்டு முழுவதுமாக படங்களில் செயல்பட உள்ளதாக வெளிப்படையாக பேசி இருந்தார்.

இனி என்னுடைய ரசிகர்கள் யாரும் அவமானப்படக்கூடாது, அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன் என வசனங்களை விட்டெறிந்தார் சிம்பு. ஆனால் அவர் இப்போது செய்திருக்கும் காரியம் தான் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. அதாவது சமீபத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் சிம்பு மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also Read : சிம்புவிடம் ஒரு கோடி எடுத்து வைக்க சொன்ன தயாரிப்பாளர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதி

அதாவது கோவிட் தொற்று முதல் அலைக்கு பிறகு கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களினால் இந்த படம் தள்ளிப் போக அதன் பிறகு கால்ஷீட் கொடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக சிம்பு பெற்றிருந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு வருடத்திற்குள் சிம்பு நேரம் ஒதுக்கியும் படம் எடுக்காததால் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க தேவையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு தயாரிப்பாளர்களை கோர்ட்டு, கேஸ் என்று அலையவிட்டுக் கொண்டிருக்கும் சிம்பு காசுக்காக ஒரு காரியம் செய்துள்ளார்.

Also Read : மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

அதாவது தயாரிப்பாளர்களுக்கு தேதி கொடுக்க நேரமில்லாத சிம்பு இப்போது விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதாவது போக்குவரத்து சம்பந்தமான அபிபஸ் என்ற ஒரு இணையதள செயலி விளம்பரத்தில் மாஸ் லுக்கில் சிம்பு நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிம்பு விளம்பரங்களில் நடிப்பதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் படங்களில் தயாரிப்பாளர்கள் பெரிய தொகை போட்டு காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு விளம்பரங்களில் நடிப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News