2022இல் இருந்து இப்ப வரை சிம்பு மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு, மகா, பத்து தலை இந்த மூன்று படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இப்பொழுது மணிரத்தினத்தின் தக்லைப் படத்தில் மட்டுமே கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கும் சிம்பு அவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க வேண்டிய எஸ்டிஆர் 48 படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த படத்திற்காக ஒரு வருடம் தவம் கிடந்தார் சிம்பு.
தேசிங்கு பெரியசாமி இந்த படத்திற்கு 150 கோடிகள் பட்ஜெட் வேண்டும் என்று கேட்டதால் கமல் அதற்கு இப்பொழுது வரை மறுப்பு தெரிவித்து வருகிறார். அதனால் இந்த படம் இப்போது வரை கிடப்பில் தான் கிடக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த படத்தை சிம்பு தாமாகவே தயாரிக்க முன் வந்தார்.
வெளிநாடுகளுக்கு சென்று பல தயாரிப்பாளர்களை சந்தித்து வந்துள்ளார் சிம்பு, இருந்தாலும் அவருக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மன சங்கடத்தில் இருந்து வந்தனர், அவர்களையும் தாண்டி சிம்பு உச்சக்கட்ட மன குழப்பத்தில் இருந்தார்.
இது ஒரு புறம் இருக்க கமலா தியேட்டரில் சிம்பு நடித்த காளை படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்பொழுதும் சிம்பு ரசிகர்கள் அதை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.. அதைப்போல மன்மதன் படத்தை பிரான்ஸ்,ஜெர்மன் என ரிலீஸ் செய்து வருகிறார்கள். அதுவும் அங்கே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் புதுப்படங்கள் நடித்து ரசிகர்கள் சந்தோஷத்தை பூர்த்தி செய்யாமல் இருக்கிறார் சிம்பு.