மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அந்த படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் தங்கள் சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி விட்டனர். அவர்களைப் போன்றே தற்போது சிம்புவும் தன்னுடைய சம்பளத்தை அதிகபட்சமாக 25 கோடியாக உயர்த்தியுள்ளார்.
இவ்வளவு சம்பளத்தை அவர் இனி கமிட்டாகும் திரைப்படங்களுக்கு கேட்டால் கூட பரவாயில்லை ஆனால் அவர் மாநாடு படத்துக்கு முன்பே கமிட் செய்த கொரோனா குமார் திரைப்படத்திற்கும் கேட்கிறாராம். இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் இல்லை என்றால் வேறு யாரையாவது பார்த்து கொள்ளுங்கள் என்று கறாராக கூறி வருகிறாராம்.
மேலும் இப்பொழுது என்னுடைய ரேஞ்சே வேற அதனால் படத்தில் நான் சொல்வது போன்று சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது சிம்பு மீது பயங்கர அதிருப்தியில் இருக்கிறார்.
ஆனால் இதை அவரிடம் காட்ட முடியுமா படத்தில் சிம்பு நடிக்க வேண்டுமே. அதனால் தற்போது படக்குழு அவரை தாஜா பண்ணும் வேலையில் இறங்கியுள்ளது. என்னவென்றால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும், அனிமேஷன்களும் இருக்கிறதாம்.
இதை சிம்புவிடம் எடுத்துக்கூறிய படக்குழு இந்தப் படம் உங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை இன்னும் அதிகப்படுத்தும் அதுபோக படத்தில் நிறைய மாற்றங்களை நாங்கள் செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக வடிவேலுவை நடிக்க வைப்பதற்கு பிளான் செய்துகொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் சிம்பு இதற்கு இன்னும் பதில் அளிக்காமல் இருக்கிறார். அப்படியும் அவர் சம்மதித்து விடுவார் என்று படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது. மேலும் சிம்பு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். அதிலும் அவருக்கு அதிகபட்ச சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் அவர் தற்போது தன்னுடைய சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டதாக திரையுலகில் பேசி வருகின்றனர்.