புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லிங்குசாமிக்காக சிம்பு செய்யும் தில்லாலங்கடி வேலை.. அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பி

சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் கழித்து தி வாரியர் என்ற படத்தை ராம் பொத்தினேனியை வைத்து தெலுங்கில் இயக்குகிறார் லிங்குசாமி. இந்தப் படம் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஸ்ரீநிவாஸ் சில்வர் ஸ்கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும், இப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தி வாரியர் படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் ஒரு பான் இந்தியப் படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

தற்போது பல இயக்குனர்களும் தங்களது படங்களை பான் இந்திய படமாக வெளியிட விரும்புகிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்காக சிம்புவிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஏற்கனவே லிங்குசாமி சிம்புவுக்காக ஒரு கதை சொல்லியுள்ளார். அந்த கதை சிம்புக்கு பிடித்துப்போக அதற்கும் ஓகே சொல்லியுள்ளார்.

அதற்கு முன்பணமாக சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது தி வாரியர் படத்தில் ஒரு பாடல் பாடி தருமாறு சிம்புவுடம் லிங்குசாமி கேட்டுள்ளார். அதுவும் சிம்பு குரலில்தான் அந்த பாடல் இருக்க வேண்டும் என லிங்குசாமி அடம்பிடித்துள்ளார்.

சிம்பு தற்போது மாநாடு படம் வெற்றிக்குப் பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல, மகா, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் பிஸியாக உள்ளதால் சிம்புவால் ஒரு படத்தைக்கூட முழுசாக முடிக்க முடியவில்லை.

ஆனாலும் லிங்குசாமி கேட்ட உடனே சிம்புவும் அண்ணனுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார். இப்பொழுது சிம்பு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அந்த பாடலை லிங்குசாமிகாக பாடி கொடுக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

Trending News