Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சூட்டிங்கை முடிக்காமல் திணறும் சிம்பு.. பேராசைப்பட்ட இப்படித்தான் முடியும்!

சூட்டிங்கை முடிக்காமல் திணறும் சிம்பு.. பேராசைப்பட்ட இப்படித்தான் முடியும்!

சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பத்து தல, வெந்து தணிந்த காடு, கொரோனா குமார் போன்ற படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை […]

சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பத்து தல, வெந்து தணிந்த காடு, கொரோனா குமார் போன்ற படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

இதற்கு முன்னதாக சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்பு இதுவரை நடித்திராத புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார் என்ற தகவல்களும் கசிந்துள்ளது.

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் இன்னும் இந்த படம் முடிந்த பாடில்லை. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்புவின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் மும்பையில் இன்னும் ஆறு நாட்கள் மீதம் இருக்கிறதாம். இதுபோக சண்டைக் காட்சிகள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறதாம். இந்த காட்சிகளை எடுக்க டிஆர் கார்டனில் படக்குழுவினர் தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், சில பேட்ச் வொர்க் இருக்கிறது. கௌதம் மேனன் தன் படங்களை ஆரம்பம் முதல் அழகாக எடுத்துச் சென்று கிளைமாக்ஸில் சொதப்பிவிடுவார். அதனால் இந்த படத்தில் அதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் முழு வீச்சுடன் வேலை பார்த்து வருகிறார்.

இதனால் வெந்து தனிந்தது காடு படத்தின் கிளைமாக்ஸில் எடுக்க மீண்டும் மும்பை செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் சிம்பு பல படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியாக உள்ளதால் அவரால் ஒரு படத்தைக்கூட முழுவதுமாக முடிக்க முடியவில்லை என படக்குழு கூறுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.