Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ED ரெய்டால் சுதாரித்து கொண்ட சிம்பு.. புது கூட்டணியில் உருவாகும் STR 49

ED ரெய்டால் சுதாரித்து கொண்ட சிம்பு.. புது கூட்டணியில் உருவாகும் STR 49

Simbu-STR49: சிம்பு இப்போது அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார். சமீபத்தில் கமல், மணிரத்னம் கூட்டணியில் அவர் நடித்த தக் லைஃப் வெளியானது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதனால் சிம்பு கொஞ்சம் அப்செட்டில் இருந்தது உண்மைதான். […]

Simbu-STR49: சிம்பு இப்போது அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார். சமீபத்தில் கமல், மணிரத்னம் கூட்டணியில் அவர் நடித்த தக் லைஃப் வெளியானது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இதனால் சிம்பு கொஞ்சம் அப்செட்டில் இருந்தது உண்மைதான். ஆனால் அதை ஓரம் கட்டி விட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். அந்த வகையில் தற்போது அவர் கூட்டணி அமைத்திருப்பது வெற்றிமாறனுடன்.

இந்த தகவல் ஆதாரம் இல்லாமல் வந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி அதை உறுதிப்படுத்தியது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் ப்ரோமோ ஷூட் முடிந்துவிட்டது.

புது கூட்டணியில் உருவாகும் STR 49

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் சிம்புவின் 49வது படமாக வெளிவர இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று தோன்றலாம்.

ஏனென்றால் அவருடைய 49வது படம் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் வருவதாக இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக டான் பிக்சர்ஸ் சில சிக்கலில் இருக்கிறது.

இதனால் யோசித்துப் பார்த்த சிம்பு ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மூலம் உருவாகும் பராசக்தி, இட்லி கடை பல வேலைகளை முதலில் முடிங்க. அந்த இரண்டு படங்களும் முதலில் வெளியாகட்டும்.

பிறகு நம் கூட்டணியில் படம் தொடங்கலாம் என சொல்லிவிட்டாராம். அதனால் இப்போது வெற்றிமாறனுடன் அவர் இணைந்துள்ள படம் தான் STR 49 ஆக வர இருக்கிறது. இது வடசென்னை சீரிஸ் என்பதும் கூடுதல் தகவல்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.