வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிம்பு தவறவிட்ட 5 மெகா ஹிட் படங்கள்.. இரண்டு வாய்ப்பை தட்டி சென்ற ஜீவா

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் தனது இளமைக் காலத்தில் சிம்புவால் மிகப்பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் சிம்புக்கு வந்த மெகா ஹிட்டான படங்களை அவரை தவற விட்டுள்ளார். மேலும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அவ்வாறு சிம்பு தவறவிட்ட 5 படங்களை பார்க்கலாம்.

திமிரு : விஷால், ரீமாசென், ஸ்ரேயா ரெட்டி, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு. இப்படத்தில் முதலில் சிம்புவை தான் ஹீரோவாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அப்போதைய சூழ்நிலையை சிம்புவால் திமிரு படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதனால் விஷால் இப்படத்தில் ஒப்பந்தமானார். மேலும் இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

கோ : கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, அஜ்மல் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோ. இப்படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. மேலும் ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அதன் பிறகு ஜீவா நடித்திருந்தார். கோ படம் வசூலில் சக்கை போடு போட்டது.

நண்பன் : ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நண்பன். இப்படத்தில் ஜீவா நடித்த சேவற்கொடி செந்தில் கதாபாத்திரத்தில் முதலில் சிம்புவை நடிக்க வைக்க ஷங்கர் கேட்டுள்ளார். ஆனால் சிம்பு சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

வேட்டை : லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டை. இயக்குனர் லிங்குசாமி முதலில் இப்படத்தின் முழு கதையும் சிம்புவிடம் கூறியுள்ளார். கதை பிடித்தும் அப்போது கால்ஷீட் பிரச்சனையால் சிம்புவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

வடசென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. கேங்ஸ்டர் கதையில் உருவான இப்படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் சிம்புவால் நடிக்க முடியாமல் போக தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படம் உருவானது.

Trending News