ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சிம்புவை மிரள வைத்த இயக்குனர்.. இந்த மாதிரி ஒரு சம்பவத்தை தான் எதிர் பார்த்திட்டு இருந்தேன்!

வாயை மூடிக்கொண்டு வீண் பேச்சு பேசாமல் தனக்கான பாதையை தானே உருவாக்கிக் கொண்டு அதில் சிங்க நடை போட்டு நடந்து கொண்டிருக்கிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தான் உண்மையான சிம்புவின் கம்பேக் திரைப்படம் என்று சொல்லும் அளவிற்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது. இதற்கு பின் அவர் எந்த படத்தில் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்தது.

தற்போது, அவர் உடனே அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார். அதன்படி அவர் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இதுவரை பார்க்காத சிம்புவை பார்க்க போகிறோம் என்று இயக்குனரும் படக்குழுவும் கூறி வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் சிம்பு இணையும் மூன்றாவது படம் இது.

அதன்பின் இயக்குனர் நரதன் மற்றும் கிருஷ்ணன் இயக்கத்தில் பத்து தல படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் டிஜே அருணாச்சலமும் சிம்புவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இப்படி பல படங்கள் வரிசை கட்டி இருக்கும் நேரத்தில் தற்போது புதிய தகவலாக ஒரு இயக்குனரோடு சிம்பு இணையப் போகிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற வித்தியாசமான கதைகளை எழுதி எளிமையான முறையில் படமாக்கி மக்களை மிரளவைக்கும் இயக்குனர்தான் மிஸ்கின், இவரிடம்தான் தற்போது சிம்பு கதை கேட்டதாக கூறப்படுகிறது, அந்தக் கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்தும் இருக்கிறது.

மிஸ்கின் எப்போதும் மிகவும் ஓபன்னாக தன்னுடைய கருத்தை சொல்லக்கூடியவர். அதேபோல சிம்புவும் எந்தவித தயக்கமும் இன்றி தனக்கு தோன்றுவதை தெளிவாகவும் தைரியமாக வெளியில் சொல்லக்கூடியவர். இவர்கள் இருவரும் தற்போது இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மிஸ்கின் பெரிய ஹீரோக்களை வைத்து எப்போது படம் எடுத்தாலும் அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை.

இந்தப் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதால் படத்தின் பட்ஜெட் படத்திற்கான செலவு இதைத்தாண்டி படம் வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பதே படக்குழுவின் நோக்கமாக இருக்கிறது. இதுகுறித்து மிஷ்கின் கூறும் போது, விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

சிம்பு இந்த படத்தின் முழு கதையையும் கேட்டு விட்டு கிளைமாக்ஸ் காட்சி வரும்போது மிரண்டு விட்டாராம். இப்படி ஒரு கதையைத்தான் நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். அப்படி ஒரு கதை எனக்கு கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தில் சிம்பு இருக்கிறார். நிச்சயமாக இந்த கூட்டணியில் ஒரு புதிய கதைக் களத்தை தமிழ் திரைத்துறை பார்க்க இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Trending News