செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கௌதம் கார்த்திக்கை கேவலப்படுத்திய சிம்பு படக்குழு.. நம்ப வைத்து மோசம் செய்த அட்டூழியம்

ஒரு சமயத்தில் சினிமாவில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் சிம்பு திரைத்துறையை விட்டு விலகும் நிலைமை இருந்தது. அப்போதுதான் மாநாடு திரைப்படம் வெளியாகி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் மூலம் அவர் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துவிட்டார் என்று கூட சொல்லலாம்.

மேலும் இந்த படத்தின் வெற்றியால் அவர் தற்போது 25 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உச்சாணிக் கொம்பில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். அதோடு இவருடைய பழைய படங்களும் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது படமாக்கப்படும் பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்த படத்திற்கு முதலில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார்.

சிம்பு இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் சில காட்சிகளில் வருவது போன்று தான் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது மாநாடு திரைப்படத்தின் வெற்றி கௌதம் கார்த்திக்கு பிரச்சனையாக மாறி இருக்கிறது. என்னவென்றால் கௌரவ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்பு தற்போது இந்தப் படத்தின் ஹீரோவாக மாறியுள்ளார்.

ஹீரோவாக நடிக்க வந்த கௌதம் கார்த்திக் தற்போது செகண்ட் ஹீரோவாக மாறி இருக்கிறார். மேலும் அவருடைய காட்சிகளும் குறைக்கப்பட்டு சிம்புவிற்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கௌதம் கார்த்திக் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம்.

ஹீரோவாக நடிக்க வந்த என்னை இப்படி செகண்ட் ஹீரோவாக மாற்றி கேவலப்படுத்தி விட்டார்கள் என்று அவர் படக்குழு மீது பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். இதைப் பற்றிதான் தற்போது திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.

Trending News