வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பச்சோந்தி இல்ல நான் வெள்ளந்தி என நிரூபித்த சிம்பு.. மறைமுகமாக மாஸ் ஹீரோவுக்கு வைத்த செக்

சமீப காலமாக சிம்புவின் நடவடிக்கைகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. முன்பெல்லாம் இவருடைய பெயர் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனைகளில் அடிபட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் இப்போது அவர் முற்றும் துறந்த ஞானி போல் மாறிவிட்டார். அதனாலேயே அவருடைய இமேஜ் ரேட்டிங் உயர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அவர் இப்போது தன்னுடைய இமேஜை புதுப்பித்து விட்டது மட்டுமல்லாமல் மெச்சூரிட்டியாகவும் நடந்து கொள்கிறார். அது சமீபத்தில் நடந்த பத்து தல பாடல் வெளியீட்டு விழாவிலேயே வெளிப்படையாக தெரிந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் ரசிகர்களிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் வரவேற்பை பெற்றது.

Also read: அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் தளபதி.. கனவு படத்திற்காக விஜய்க்கு போட்ட கொக்கி

இதன் மூலம் அவர் தன்னுடைய அவப்பெயர்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு அனைவரும் பாராட்டும் படியான ஒரு வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் அவர் ரசிகர்களை சந்தித்து பிரியாணி விருந்து வைத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அது குறித்த வீடியோக்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் சிம்பு ரசிகர்களிடம் நீங்கள் தான் எனக்கு பக்க பலமாக இருக்கிறீர்கள், உங்களுடைய ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும் என்று ஆத்மார்த்தமாக உரையாடி இருக்கிறார். மேலும் அனைவருடனும் இணைந்து போட்டோ எடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தியும் இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது கோடம்பாக்கத்தில் பல பேருக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: விரல் வித்தையால் பெருத்த அடிவாங்கிய சிம்புவின் 5 படங்கள்.. எஸ்டிஆர்-இன் கேரியரையே மாற்றிய இயக்குனர்

அதிலும் குறிப்பாக இதை விஜய்யுடன் சம்பந்தப்படுத்தியும் சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது அவர் சமீபத்தில் தன் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து ஒன்று கொடுத்திருந்தார். அது அரசியல் காரணங்களுக்காகத்தான் கொடுக்கப்பட்டது என்றும் வேறு சில உள்நோக்கங்களும் இருக்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்தது.

அது மட்டுமல்லாமல் விஜய் தன் சுயலாபத்திற்காக ரசிகர்களை பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சிம்பு செய்திருக்கும் விஷயத்தில் எந்த உள்நோக்கமும் கிடையாது. ரசிகர்களை மனதில் வைத்து தான் அவர் இதை செய்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சிம்பு இதன் மூலம் விஜய்க்கு ஒரு செக் வைத்திருப்பதாகவும், தான் ஒரு வெள்ளந்தி நடிகர் என நிரூபித்திருப்பதாகவும் அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Also read: அரசியல் ஆசையில் விஜய்யை ஃபாலோ செய்யும் சிம்பு.. மணக்க மணக்க எஸ்.டி.ஆர் செய்த சம்பவம்

Trending News