புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொக்கு போல் காத்திருந்து வசமாய் தூக்கிய சிம்பு.. அல்வா கொடுத்த கமலுக்கு கிண்டிய பால்கோவா

எஸ் டி ஆர் 48 படத்துக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கொக்கு போல் காத்திருந்தார் சிம்பு. 10 தல படத்துக்கு பின்னர் சிம்பு இந்த படத்திற்காக தான் தன்னை தயார்படுத்தி வந்தார். இதற்காக ஒரு வருட காலம் நீண்ட தலை முடியை வளர்த்து கதாபாத்திரத்திற்காக தன்னை மெருகேற்றினார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்த இந்த படத்திற்கு பல பிரச்சினைகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த படத்திற்காக இயக்குனர் ஒதுக்கிய பட்ஜெட் 150 கோடிகள். ஆனால் கமலின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் இதற்கு எதிர்வலைகள் தெரிவித்தது.

சிம்புவை வைத்து இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பது முடியாத காரியம் என ஆரம்பத்தில் இருந்தே கமல் இதற்கு நிறைய முட்டுக்கட்டைகள் போட்டு வந்தார். இதனால் இந்த படம் இழுத்துக் கொண்டே போனது. அதன் பின்னர் சிம்பு மற்றும் கமல் இணைந்து மணிரத்தினத்தில் தக்லைப் படத்தில் ஒப்பந்தமாகினார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே சிம்பு எஸ் டி ஆர் 48 கதையை விடுவதாக இல்லை. தேசிங்கு பெரியசாமியை அழைத்து நான் இந்த படத்தை தயாரிக்கிறேன் என வாக்குறுதிகளை கொடுத்து தன்னை தயார் படுத்தி வந்தார். அதுவும் போக பெரிய பட்ஜெட் என்பதால் தயாரிப்பாளர்களை தேடியும் அலைந்தார்.

இப்பொழுது துபாய் தொழிலதிபரான கண்ணன் ரவி என்பவர் இந்த படத்தை தயாரிக்கப் போகிறார். இதற்கான செலவு 150 கோடிகளையும் சிம்புவிடம் ஒப்படைக்கிறார். துபாய் பணம் என்பதால் சிம்பு தனியாக ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி காத்துக் கொண்டிருக்கிறார். மொத்த பணத்தையும் வைத்து ஃபர்ஸ்ட் காபி எடுக்கப் போகிறார் சிம்பு.

Trending News