Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பார்ட் 2 படத்துக்கு தயாரான எஸ்டிஆர்.. தக் லைஃப் தோல்வியால் சிம்பு நாடிய இயக்குனர்

பார்ட் 2 படத்துக்கு தயாரான எஸ்டிஆர்.. தக் லைஃப் தோல்வியால் சிம்பு நாடிய இயக்குனர்

Simbu : சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப் படம் தோல்வியை தழுவியது. செக்க சிவந்த வானம் படத்திற்குப் பிறகு மணிரத்னத்துடன் கூட்டணி போட்டார் சிம்பு. ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் அப்செட் ஆகிவிட்டார். ஆகையால் […]

Simbu : சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப் படம் தோல்வியை தழுவியது. செக்க சிவந்த வானம் படத்திற்குப் பிறகு மணிரத்னத்துடன் கூட்டணி போட்டார் சிம்பு. ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் அப்செட் ஆகிவிட்டார்.

ஆகையால் உடனடியாகவே வெற்றி கொடுக்க வேண்டும் என்று இப்போது வெற்றிமாறன் உடன் கைகோர்த்து இருக்கிறார். இந்த படம் வடசென்னை சாயலில் ராஜன் வகையறாவை பற்றிய கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் சிம்புவின் கேட்டப்பும் அதே போல் இருக்கிறது. இதைதொடர்ந்து அடுத்ததாக வெற்றி கூட்டணியில் மீண்டும் சிம்பு இணைய இருக்கிறார். அதாவது தொடர்ந்து சிம்பு தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் அவரை தூக்கிவிட்ட படம் தான் மாநாடு.

பார்ட் 2 படத்தில் நடிக்க போகும் சிம்பு

வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கி இருந்தார். டைம் டிராவல் வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவும் ஸ்கோர் செய்திருந்தார். இந்தக் கூட்டணியில் மீண்டும் மாநாடு 2 படம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சிம்பு, வெற்றிமாறன் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் படங்களை முடித்துவிட்டு வர இருக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபுவும் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.

இந்த படங்கள் முடிந்த கையோடு மாநாடு 2 தொடங்க இருக்கிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. தக் லைஃப் தோல்வியை மறக்கடிக்கும் அளவுக்கு இந்த படம் உருவாக உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.