சினிமாவை மொத்தமாய் கரைத்துக் குடித்தவர் சிம்பு. ஆரம்பத்திலிருந்து கமலுக்கும் இவருக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருந்து வருகிறது. இருவருமே சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு ஐடியாவில் இருப்பவர்கள். பத்து தலை படத்துக்கு பின் சிம்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இப்பொழுது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல், சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படம் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகியும் இந்த ப்ராஜெக்ட் இன்னும் இழுவையில் உள்ளது. இடையில் இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கிறேன் என்ற பெயரில் சிம்பு கேரளா, பாங்காக் என ஊர் சுற்றி வருகிறார்.
கடைசியாக கமல், சிம்புக்கு டெட்லைன் கொடுத்து இருக்கிறார். நவம்பர் 1ஆம் தேதி சூட்டிங் ஆரம்பித்தே ஆக வேண்டும் என்று ஆண்டவர் கட்டளை போட்டுள்ளார். சிம்பு இயற்கையாகவே கொஞ்சம் சோம்பேறித்தனம் கொண்டவர். ஆண்டவர் விஷயத்தில் அப்படி நடந்து கொள்ள மாட்டார் என்று பார்த்தால் மற்றவர்களை விட இவருக்கு தான் நிறைய பிரச்சனை கொடுத்து வருகிறார்.
இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹீரோ மற்றும் வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களாம். நீண்ட முடியுடன் ஒரு கெட்ட பிலும் கம்மியான முடியுடன் மற்றொரு கெட்டப்பிலும் தோன்றுகிறார். வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தலை இந்த இரண்டு படங்களுமே சிம்புவுக்கு விமர்சனம் ரீதியாக ஒரு அடி தான்.
எப்படியாவது மீண்டும் தன்னை நிலை நிறுத்தி ஜெயிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தும் கூட அவரால் பழைய விஷயங்களில் இருந்து வெளிவர முடியவில்லை. இந்த படம் ஒன்றரை வருடங்கள் இழுப்பதற்கு இதுதான் ஒரு பெரிய காரணம்.
6 மணிக்கு மேல் சிம்பு எந்த உலகத்தில் இருப்பார் என்றே தெரியவில்லை. ஆரம்பத்தில் இதுதான் அவர் மீது ஒரு பெரிய குற்றமாக சொல்லப்பட்டது. இப்பொழுதும் வேதாளம் பழையபடி முருங்க மரம் ஏறுகிறது. கமல். பிக் பாஸ். இந்தியன் 2 போன்ற படங்களில் பிசியாக இருப்பதால் இன்னும் சிம்புவுக்கு செக் வைக்கவில்லை.