வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்த 5 டைரக்டர்களை வெறுத்து ஒதுக்கிய சிம்பு.. 13 வருடங்களா தல காட்ட முடியாமல் போன இயக்குனர்

Simbu Hated 5 Directors: சிம்புவைப் பொறுத்தவரை தொடர் வெற்றி படங்களை கொடுக்கக்கூடியவர் அல்ல. எப்பவாது அத்தி பூத்தார் போல் ஏதாவது ஒரு படம் வெற்றி அடைந்து இவருடைய கேரியரை தூக்கிவிடும். அந்த வகையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் சிம்புவின் வெற்றி படங்கள் இருக்கிறது. ஆனால் அதைவிட ஃபெயிலியர் படங்கள் தான் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் சில இயக்குனர்கள் வேண்டாம் என்று வெறுத்து ஓரம் கட்டி இருக்கிறார். அந்த இயக்குனர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

கௌதம் மேனன்: முக்கால்வாசி கௌதமேனன் எடுக்கக்கூடிய படங்கள் காதல், ரொமான்டிக் மற்றும் திரில்லர் படங்களாக இருக்கும். அப்படித்தான் விண்ணைத்தாண்டி வருவாயா படம் இவர்கள் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் கூட்டணி வைத்தார்கள். ஆனால் இதில் சில மனக்கசப்பு சிம்புவிற்கு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது சிம்பு ரொம்பவே மெனக்கெடு செய்து கஷ்டப்பட்டு நடித்த முக்கால்வாசி காட்சியை கட் செய்து இருக்கிறார். அத்துடன் படப்பிடிப்பில் சிம்புவிடம் கொஞ்சம் மோசமாகவும் நடந்திருக்கிறார். இதனாலையே இனி கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க கூடாது என்று சிம்பு முடிவெடுத்து இருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன்: இவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் சிம்புவுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதற்கு காரணம் சிம்புவின் அதிக பிரசிங்கித்தனமான வேலை தான். எங்க இஷ்டப்படி கதையை பண்ண விடாமல் அதில் மூக்கை நுழைத்தது தான் தோல்விக்கு காரணம் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பத்திரிகையாளரிடம் பேட்டி அளித்தார். அதனாலேயே சிம்புவுக்கு, ஆதிக் ரவிச்சந்திரன் இனி ஒத்து வராது என்று ஒதுங்கி விட்டார்.

Also read: தனுஷ் படத்தில் இணையும் சிம்பு.. எஸ்டிஆர் க்கு என்ன கேரக்டர் தெரியுமா?

VZ துரை: இவர் சிம்புவை வைத்து 2005 ஆம் ஆண்டு தொட்டி ஜெயா என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் எதிர்பார்த்த அளவைவிட விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சிம்புவின் அப்பா டி ராஜேந்திரன் இயக்குனரை சந்தித்து சம்பளம் விஷயமாக பிரச்சனை செய்திருக்கிறார். அத்துடன் படப்பிடிப்பின் போது சிம்புவிற்கும் இயக்குனருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த இயக்குனரை வெறுத்து விட்டார்.

தரணி: இவர் சினிமாவில் ஒரு பொக்கிஷ இயக்குனர் என்ற இடத்தை பிடித்திருந்தார். காரணம் விக்ரமுக்கு தூள் படத்தையும், விஜய்க்கு கில்லி என்கிற படத்தையும் கொடுத்து அவர்களுடைய கேரியரில் திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் இவர்தான். அப்படிப்பட்ட இவர் கடைசியாக 2011 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து ஒஸ்தி என்கிற படத்தை எடுத்தார். அப்பொழுது சிம்பு சில காட்சிகள் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று அவர் யோசனைப்படி மாற்றியமைத்தார். அதன்படி இயக்குனர் செய்ததால் ஒஸ்தி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனாலையே சினிமாவை விட்டு இயக்குனர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.

விக்னேஷ் சிவன்: இவர் இயக்குனராக அறிமுகமானது சிம்புவை வைத்து போடா போடி என்கிற படத்தை எடுத்ததன் மூலம். இப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் சிம்புவுக்கு ஒரு இமேஜை கிரியேட் பண்ணி கொடுத்தது. ஆனால் இப்படம் பண்ணுவதற்குள் விக்னேஷுக்கும் சிம்புவுக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் நடந்திருக்கிறது. பொதுவாகவே சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார். அதே மாதிரி கால் சீட்டும் சரியாக கொடுக்க மாட்டார் என்று பல சர்ச்சைகளில் சிக்கிருக்கிறார். அதே பிரச்சனையில் தான் போடா போடி படபிடிப்பின் போது விக்னேஷுக்கும் சிம்புவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது.

Also read: தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. சிம்புவுக்கு ஒர்க் அவுட் ஆச்சு, விஜய்க்கு செட் ஆகுமா?

Trending News