செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

படு உஷாரான சிம்பு.. தனுசை வைத்து நகர்த்திய காய்

சிவாஜி, எம்ஜிஆர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். அதாவது எம்ஜிஆர்-சிவாஜி தொடர்ந்து ரஜினி-கமல் அதன்பின்பு விஜய்-அஜித் என இந்த இரட்டை நடிகர்களின் போட்டிகள் தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தற்போது உள்ள இளைய தலைமுறையினர் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே போட்டி போட்டு வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது, ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக வந்து வெற்றி கண்டுள்ளது.

Also Read :வெந்து தணிந்தது காடு இண்டர்வல் பிளாக், கிளைமாக்ஸை பற்றி வாய் திறந்த சிம்பு

இதற்கு காரணம் சிம்பு தான் என்று ஒரு தரப்பு கூறுகின்றனர். ஏனென்றால் சமீபகாலமாக படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் படத்தை பற்றி மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சில படங்கள் நன்றாக இருந்தாலும் இதுபோன்ற மோசமான விமர்சனங்களால் தோல்வியடைகிறது.

இந்நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் வெளியாகும்போது சிம்பு தனது சுற்று வட்டாரம் மற்றும் ரசிகர்களிடம் இதுபோன்ற விமர்சனங்கள் வைக்க கூடாது என வேண்டுகோள் வைத்திருந்தாராம். இதனால்தான் திருச்சிற்றம்பலம் படம் நெகடிவ் விமர்சனங்கள் இன்றி வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

Also Read :தனுஷ் நடிக்க ஆசைப்பட்ட கதை.. சுயநலமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா

அதுமட்டுமின்றி தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது போன்று சிம்பு பற்றிய நல்ல விஷயங்கள் வெளியானால் படம் வெற்றி பெறும் என்ற நினைப்பில் கூட இது போன்ற செய்திகளை பரப்பலாம்.

மேலும், சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படம் வசூல் சாதனை படைத்தது சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ள சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also Read :முரட்டுத்தனமான வெயிட்டால் எல்லா பக்கமும் பறிபோன வாய்ப்பு.. பழைய சிம்புவாக மாறிய நடிகர்

Trending News