புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த சிம்பு.. பத்து தல படத்தால் படாத பாடுபடும் படக்குழு

சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் மீதம் சில வேலைகள் உள்ளதாம். அதுமட்டும் இன்றி சிம்புவால் படக்குழு தற்போது படாதபாடு பட்டு வருகிறது.

அதாவது சிம்பு அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்காக பாங்காங் சென்றுள்ள சிம்பு அங்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். அங்கு சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகிறதம். இந்நிலையில் பத்து தல படத்தின் டப்பிங் பேச சிம்பு வர மறுக்கிறாராம்.

Also Read : கௌதம் மேனனின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. சிம்புக்கு வாழ்க்கை கொடுத்த ஒரே படம்

காரணம் என்னவென்றால் முதலில் பத்துதல படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்று சிம்பு இல்லாமல் படக்குழு எடுத்துவிட்டனர். படத்தில் ஹீரோ இல்லாமல் எப்படி ப்ரோமோ சாங் எடுக்கலாம் என்று பெரிய சர்ச்சை கிளம்பி இருந்தது. ஆனால் இதற்கும் ஒரு காரணம் உள்ளது. அதாவது முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் கதாநாயகனாக தேர்வானார்.

இதில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது. மாநாடு படம் வெளியாகி சிம்புவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டது. ஆகையால் பத்து தல படத்தில் சிம்புவை கதாநாயகனாக மாற்றி விட்டார்கள். இப்போது வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வச்சது போல சிம்பு பத்து தல படக்குழுவை அலைக்கழித்து வருகிறார்.

Also Read : அனல் பறக்க கத்தி, துப்பாக்கி என வெறிபிடித்த சிம்புவின் புகைப்படங்கள்.. வைரலாகும் பத்து தல

மேலும் மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் சம்பளமும் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பே பத்து தல படத்தில் சிம்பு கமிட் ஆகி விட்டார். இந்த படத்திற்கு 6 கோடியில் இருந்து 8 கோடி வரை கூடுதலாக தயாரிப்பு நிறுவனம் சிம்புக்கு கொடுத்துள்ளது.

அப்போதுமே சிம்பு பத்து தல படத்திற்கு டப்பிங் பேசாமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் அறிவித்த நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சிம்பு மனசு வைத்தால் மட்டுமே இந்த படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலைமைக்கு தயாரிப்பாளர் தள்ளப்பட்டுள்ளார்.

Also Read : விஜய் படத்தின் பிரமோஷனுக்கு சென்ற சிம்பு.. உச்சகட்ட கோபத்தில் தயாரிப்பாளர்

Trending News