சிம்புவின் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் FDFS ஷோ நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்கிறது.
இந்த படத்தின் FDFS பார்ப்பவர்கள் நன்றாக தூங்கி எழுந்து வர வேண்டும், படத்தின் கதையோடு கொஞ்ச நேரம் ஒன்றிப்போவது கடினம் என்று ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சொல்லிவிட்டார். இப்போது இந்த படத்தின் ப்ரீ டாக்ஸ் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.
Also Read: வெந்து தணிந்தது காடு 5 மணி ஷோ பாக்க போறீங்களா.? பயமுறுத்தி அறிக்கை வெளியிட்ட கவுதம் மேனன்
இந்த படத்தின் ப்ரீ டாக்ஸ் பற்றி பேசுகையில் படம் நன்றாக வந்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை என்பதால் முழுக்க முழுக்க முத்து என்ற தனி மனிதனின் வாழ்க்கை கதை என்பதால் கதையோடு ஒன்றிப்போவது கொஞ்சம் கஷ்டமாக இருக்குமாம்.
படத்தின் இண்டர்வல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி பற்றி ஏற்கனவே சிம்பு கூறியிருந்தார். மீண்டும் ப்ரீ டாக்சிலும் அதையே தான் சொல்கிறார்கள். படத்தின் இண்டர்வல் பிளாக் மற்றும் கிளைமாக்ஸ் பக்காவாக இருக்கிறதாம்.
Also Read: படு உஷாரான சிம்பு.. தனுசை வைத்து நகர்த்திய காய்
வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் ஹாப் பக்காவான பேக்கேஜாக வந்து இருக்கிறது என்கிறார்கள். சிம்பு ரசிகர்கள் அவரின் மாஸ் சீன்ஸ், பஞ்ச் டயலாக் எல்லாம் எதிர்பார்த்து வர வேண்டாம் எனவும் இந்த படம் கிளாஸான படம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு பிறகு இசை புயல் AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: வெந்து தணிந்தது காடு இண்டர்வல் பிளாக், கிளைமாக்ஸை பற்றி வாய் திறந்த சிம்பு