புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சிங்கப்பெண்ணே: கையும் களவுமாக சிக்கிய மித்ரா.. திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆன நிலைமை

Singapenne Promo: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போனது. தில்லை இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் 25 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் கடைசியில் போர்க்களமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆபீஸ் மற்றும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமாக இருக்க, ஆனந்தி, அன்பு, மித்ரா, அரவிந்த் ஆளுக்கு ஒரு பக்கம் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மித்ரா கலந்து கொடுத்த மயக்க மருந்து கலந்த ஜூசை குடித்துவிட்டு ஆனந்திக்கு தலைசுற்ற, பாத்ரூமுக்கு சென்று முகத்தை கழுவி வருவதற்காக போனாள். அப்போது அரவிந்து செட் பண்ணிய மாயா பெண் வேடம் அணிந்து ஆனந்திக்கு பின்னாலேயே பாத்ரூமுக்கு சென்று அவளை தண்ணீரில் அழுத்தி கொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் ஆனந்தியை தேடி பாத்ரூம் சைடு வந்த அன்பு சத்தம் கேட்டு உள்ளே வந்து மாயாவை அடி நொறுக்க ஆரம்பித்து விட்டான்.

தப்பி ஓடிக்கொண்டிருக்கும் மாயாவை பிடிப்பதற்காக அன்பு பின்னாலேயே துரத்திப் போகும் வேளையில் ஆனந்தியை கவனிக்காமல் அந்த இடத்திலேயே விட்டு விடுகிறான். அந்த நேரத்தில் ஆனந்தியை தேடி பாத்ரூமுக்கு வந்த மித்ரா அவளை பார்த்துவிட்டு, கைதாங்கலாக கூட்டி சென்று அவள் பிளான் பண்ணி வைத்திருக்கும் ரூமில் படுக்க வைக்கிறாள். அதே ரூமுக்கு மயக்க நிலையோடு மகேஷ் போய் ஆனந்தியின் பக்கத்திலேயே படுத்து விடுகிறார்.

இதற்கிடையில் அன்பு மற்றும் ஆனந்தியின் தோழிகள் இருவரும் ஆனந்தியை தேடி அலைகிறார்கள். எதிரில் மித்ராவை பார்த்த ஆனந்தியின் தோழிகள், அவளைப் பற்றி விசாரிக்கிறார்கள். மித்ரா, எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டாலும், இவர்கள் ஆனந்தி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அந்த ரூமை பூட்டுவதற்கு போகிறாள். அங்கு உள்ளே போய் பார்க்கும் பொழுது மகேஷ், ஆனந்தியை கட்டி அணைத்தபடி படுத்திருக்கிறான்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆன நிலைமை

இதை பார்த்த மித்ரா தலைகால் புரியாமல் ஓ என அழுது புலம்புகிறாள். இதை யாராவது பார்த்து விட்டால் நான் என்ன செய்வது, மகேஷ் எனக்கு மட்டும்தான் நான் யாருக்காகவும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என கதறுகிறாள். அழுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று அவளை அவளே தேற்றிக்கொண்டு, ஆனந்தியை மறுபடியும் கை தாங்கலாக பிடித்து செடி மற்றும் புதர்கள் நிறைந்திருக்கும் இடத்தில் கொண்டு வந்து படுக்க வைக்கிறாள்.

இதை மித்ராவின் அம்மா சத்யா பார்த்துவிட்டு, மித்ராவை அதட்டி கூப்பிடுவது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. உண்மையிலேயே ஆனந்தியை அந்த கோலத்தில் மித்ரா அழைத்து வருவதை சத்யா பார்த்து விட்டாரா அல்லது வேறு எதற்காகவாவது கூப்பிட்டாரா, ஆனந்திக்கு என்ன நடந்தது என்பதை அன்பு கண்டுபிடிப்பானா என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

Trending News