வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனந்தி கேரக்டருக்கு டஃப் கொடுக்க வரும் ரெஜினா

Sun tv New Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் அன்பு மற்றும் மகேஷின் நடிப்பு மக்களை கவர்ந்ததால் இவர்களுக்காகவே நாடகத்தை பார்த்து வருகிறார்கள். ஆனாலும் அன்பு தான் அழகன் என்ற உண்மை ஆனந்தியிடம் சொல்லாமல் மறைப்பது கொஞ்சம் ஏமாற்றமாகவே போகிறது.

இருந்தாலும் தற்போது மகேஷ், மொத்த பாரத்தையும் அன்பு மீது போடும் விதமாக ஆனந்தியை காதலிக்கும் உண்மையை சொல்லிவிட்டு காதலை சேர்த்து வைக்க பொறுப்பும் உன்னிடம் தான் இருக்கு என்று அன்புவிடம் கேட்டு இருக்கிறார். அதனால் அன்பு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் விதமாக ஆனந்தியை விட்டு அன்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்.

இதற்கு இடையில் விதி யாரை விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப தற்போது ஆனந்தி, அன்புடன் இருக்கும் விதமாக அன்பு வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். இதனை அடுத்து இந்த நாடகத்துக்கு இன்னும் ஹைலைட்டாக அமைந்த விஷயம் என்னவென்றால் ஆனந்தியின் நட்பு வட்டாரங்கள் தான். அதிலும் ஆனந்தியின் தோழி ரெஜினா என்கிற ஜீவிதாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

ஆனால் திடீரென்று இவர் இந்த நாடகத்தை விட்டு விலகியதால் மக்கள் ரெஜினாவின் நடிப்பை மிஸ் பண்ணினார்கள். அதே மாதிரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இந்திரா சீரியலிலும் ரெஜினா கேரக்டர் திடீரென்று காணாமல் போய்விட்டது. இதனால் ஏமாற்றமான மக்கள் எப்பொழுது ஜிவிதாவை மறுபடியும் சிங்கப்பெண் சீரியலில் பார்ப்போம் என்று காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் தற்போது ஜாக்பாட் ஆக சன் டிவியில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயின் ஆக ரஞ்சினி என்ற நாடகத்தின் மூலம் ரெஜினா என்டரி கொடுக்கப் போகிறார். இந்த நாடகம் முழுக்க முழுக்க நட்பு ரீதியாக இருக்கப்போகிறது. சிங்க பெண்ணே சீரியலில் நடித்த ஆனந்திக்கு டஃப் கொடுக்கும் விதமாக ரஞ்சினி என்ற கேரக்டர் மூலம் ரெஜினா வரப்போகிறார்.

Trending News