ஆரம்பத்தில் பல சொதப்பல்களை உண்டாக்கி கங்குவா படமும், இந்தியன் 2 படம் போல் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு புஸ்ஸுன்னு போய்விடும் என்ற அவப்பெயருக்கு ஆளானது. முதலில் படத்தின் டீசர் வெளியானதிலிருந்து இந்த படத்திற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தது.
கங்குவா படத்தின் டீசர் நன்றாக இல்லை. ஏதோ கார்ட்டூன் போல் வி எப் எக்ஸ் வேலைகள் எல்லாம் இருக்கிறது என பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தது. இப்படி ஆரம்பத்திலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து மொத்த யூனிட்டையும் புண்ணாக்கியது.
ஒவ்வொரு விமர்சனங்களையும் தனித்தனியாக எடுத்து சேர்த்து வைத்த சிறுத்தை சிவா அதனை மொத்தமாய் வி எப் எக்ஸ் டீமிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த இடத்திலிருந்து இப்படி ஒரு விமர்சனம் வந்துள்ளது, அவர்கள் அப்படி கூறினார்கள் என பல தரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களையும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டீமிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தியன் 2 பயத்தால் கிடைத்த பரிசு
ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விமர்சனங்களையும் எடுத்து அதனை சரி செய்து இருக்கிறது கங்குவா படத்தின் வி எப் எக்ஸ் டீம். அதற்கு கிடைத்த பரிசு தான் பிரமிப்போடும் ட்ரைலர். உலக சினிமாக்களே கங்குவா படத்தின் டிரைலரை பார்த்து மிரண்டு போய் உள்ளது.
இப்பொழுது சிறுத்தை சிவா மனதில் உள்ள எண்ணமெல்லாம் மக்கள் ரசனையை எப்படி பூர்த்தி செய்வது என்பது தான். ஏற்கனவே சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் 2 படம் மண்ணை கவியது. அதனால் இங்கே ஒருத்தர் பெயரையோ, முன் அனுபவங்களையோ சொல்லி முன்னேறி விட முடியாது என ஒவ்வொரு காட்சிகளையும் மெருகேற்றி வருகிறார்.
- பாகுபலியை அட்டை காப்பி அடித்த கங்குவா டீம்
- கடனில் சிக்கி தவிக்கும் தங்கலான், கங்குவா ரிலீஸ்
- உலக சினிமாவை மெய்சிலிர்க்க செய்த கங்குவா