புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ராஜமவுலியை ஓவர்டேக் செய்யும் சிறுத்தை சிவா.. கங்குவாவில் உள்ள மாஸ் சம்பவம்

Kanguva: பிரம்மாண்ட படங்களின் மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் ராஜமவுலி தன்னுடைய படங்களில் எதிர்பார்க்காத பல விஷயங்களை புகுத்தி இருப்பார். மேலும் ஒவ்வொரு காட்சியும் எதிர்பார்க்காத அளவு மிகப் பிரமாண்டமாக எடுக்கக்கூடியவர்.

இப்போது ராஜமவுலியே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு சிறுத்தை சிவா கங்குவா படத்தில் மாஸ் காட்சிகளை வைத்திருக்கிறார். அதாவது சூர்யாவின் திரை வாழ்க்கையிலே மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 3d அனிமேஷனில் உருவாகி வருகிறது. மேலும் கங்குவாவில் நீருக்கு அடியில் ஒரு சண்டை காட்சி இடம்பெறுகிறதாம்.

இந்த சண்டை காட்சியில் மட்டுமே கிட்டதட்ட 500 ஃபைட்டர்ஸ் இடம்பெறுகிறார்கள். படத்தில் இந்த காட்சி மிகவும் அட்டகாசமாக இருக்கும் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த காட்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 20 கோடியை தயாரிப்பு நிறுவனம் செலவு செய்திருக்கிறதாம்.

Also Read : நடிக்க தெரில, பிஞ்சி மூஞ்சி, சாக்லேட் பாய்.. சூர்யாவின் தலையெழுத்தையே மாற்றிய அசிஸ்டன்ட் டைரக்டர்

ஆகையால் கோலிவுட் சினிமாவே கொண்டாடும் விதமாக கங்குவா படம் இடம்பெற இருக்கிறது. மேலும் இந்த படம் இந்தியன் 2 உடன் போட்டி போட இருக்கிறது. அதாவது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கங்குவா திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் பாகுபலி படம் இப்போது வரை எவ்வாறு ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கிறதோ கண்டிப்பாக அதே போல் கங்குவா படமும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக கங்குவா படக்குழு படத்தின் போஸ்டரை வெளியிட்டு வருகிறது.

Also Read : கொந்தளித்து மேடையிலேயே கோவப்பட்ட அமீர்.. சூர்யா கார்த்தி சண்டையைக் கிண்டிய பிரஸ்மீட்

Trending News