சிவகார்த்திகேயன் தற்போது ரொம்ப கடனில் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் டாக்டர் படம் ஓரளவு இவருக்கு வசூல் ரீதியாக நல்லதொரு லாபத்தை ஈட்டித் தந்தது. அந்த படத்தினால் சிவகார்த்திகேயன், தான் வாங்கிய பெரும் தொகை கடனை அடைத்து விட்டதாக கூறுகிறார்கள்.
கடனை ஓரளவு அடைத்தாலும் அவருக்கு இன்னும் கடன் பாக்கி தீர்ந்தபாடில்லை. கடனுக்காக தயாரிப்பாளர்களுக்கு, கால்சீட் கொடுத்து வருகிறார். தற்போது தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான் சிவகார்த்திகேயன் தனது நண்பருக்கு கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். பெரும் கடன் சுமையில் இருக்கும் சிவகார்த்திகேயன், நண்பருக்காக இவ்வளவு பெரும் தொகையில் கார் வாங்கிக் கொடுத்தது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஆச்சரியமாக பேசப்படுகிறது.
சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் உயர்ந்த பொறுப்பில் உள்ள அவரது நண்பனான கலை என்பவருக்கு தான் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். சிவாவின் அனைத்து பொறுப்புகளையும் இந்த கலை தான் கவனித்து வருகிறார்.
எஸ் கே புரோடக்சன்ஸ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதற்கு இவர் தான் முக்கிய காரணம். அதனால்தான் இவருக்கு இத்தகைய உயரிய பரிசு. இதற்கு முன்னர் சிவாவிற்கு எல்லாமுமாக இருந்த ஆர் டி ராஜாவின் இடத்தில்தான் இவரை வைத்து அழகு பார்க்கிறார் சிவகார்த்திகேயன்.