திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சின்ன வயசுலயே மாமா பொண்ணுக்கு ரூட் விட்ட சிவகார்த்திகேயன்.. ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ

Sivakarthikeyan-Childhood-Photo: சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் கிடைத்த வரவேற்பின் காரணமாக வெள்ளித்திரையிலும் கால் பதித்து பட்டையை கிளப்பி வந்தார். இப்போது அவருடைய வளர்ச்சியை பார்த்து சக நடிகர்களை பொறாமைப்படும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

Also Read : உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவை வைரலாக்கி வந்தனர். அதாவது சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஆர்த்தி வேறு யாருமில்லை சிவகார்த்திகேயனின் உறவுக்கார பெண்தான். அதாவது தனது மாமா பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

இவர்களுக்கு முதல் குழந்தையாக ஆராதனா சிவகார்த்திகேயன் பிறந்தார். பார்ப்பதற்கு அப்படியே அம்மாவையே உரித்து வைத்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஆராதனாவுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் சிறுவயதிலிருந்தே படங்களில் பாடல் பாட ஆரம்பித்து விட்டார்.

Also Read : மலேசியாவில் அசிங்கப்பட்ட சிவகார்த்திகேயன்.. வாண்ட்டாக போலீஸிடம் மாட்டிக் கொண்ட நிலை

மேலும் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இவருக்கு குகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி இருவருக்குமே உருவ ஒற்றுமை அதிகம் இருக்கிறது. இதனால் இவர்களது குழந்தையும் அவர்களின் ஜாடைகளிலேயே இருக்கிறார்கள்.

இந்நிலையில் சிறுவயதிலிருந்து சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி ஒன்றாக தான் பயணித்திருக்கிறார்கள். அப்போது விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற போது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அப்பவே சிவகார்த்திகேயன் அட்ராசிட்டி செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் மாமா பெண்ணை ரூட்டு விட்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். மாவீரன் ரிலீஸ் நெருங்கி வரும் நேரத்தில் சிவகார்த்திகேயனின் இதுபோன்ற புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

sivakarthikeyan-childhood-photo
sivakarthikeyan-childhood-photo

Also Read : சந்தில் சிந்து பாடிய சிவகார்த்திகேயன்.. பிசினஸ் வேற, நட்பு வேறன்னு மறுத்த கமல்

Trending News