Major Mukund Varatharajan-Sivakarthikeyan: நாட்டுக்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் என்பது தற்போது உறுதியாக தெரிகிறது. நேற்று படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் யார் இந்த முகுந்த் வரதராஜன் என்பதை பற்றி காண்போம்.
சென்னையைச் சேர்ந்த முகுந்தின் அப்பா வரதராஜனுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற பெரும் ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய கனவு நிறைவேறாமல் போன நிலையில் முகுந்த் அதை நினைவாக்கினார். ஏகப்பட்ட போர்களை சந்தித்திருக்கும் இவர் ஒரு முறை துப்பாக்கி குண்டையும் தன் முதுகில் தாங்கி இருக்கிறார். அதேபோன்று கண்ணி வெடியில் கால் வைத்து நூலிலையில் உயிர் தப்பி இருக்கிறார்.
இப்படி நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புடன் இருந்த முகுந்த் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையின் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். அந்த சமயத்தில் தான் அதாவது 2013 ஆம் ஆண்டில் காஷ்மீரில் உள்ள யாச்சு குகன் பகுதியின் ஆப்பிள் தோட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவினர். அவர்களை பிடிப்பதற்காக முகுந்த் தலைமையில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை துப்பாக்கி சூடு நடத்துகிறது.
அதில் சமயோகிதமாக செயல்பட்ட மேஜர் தீவிரவாதியை சுட்டுக் கொள்கிறார். இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் அதாவது 2014 ஏப்ரலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் வீர மரணம் அடைந்தார். அன்று நடந்தது இதுதான். அதாவது தீவிரவாத படையின் முக்கியமான ஆட்கள் பொதுமக்களின் வீடுகள் இருக்கும் பகுதியை முற்றுகையிட்டனர்.
Also read: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. ரத்தம் தெறிக்கும் சிவகார்த்திகேயனின் SK21 டைட்டில் டீசர்
இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக மேஜர் தன் நண்பர் சிப்பாய் விக்ரம் சிங்கை அழைத்துக் கொண்டு தீவிரவாதிகளை பிடிக்க செல்கிறார். அப்போது நடந்த தாக்குதலில் மேஜரின் நண்பர் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறக்கிறார். ஆனாலும் கவனம் சிதறாத முகுந்த் வெற்றிகரமாக தீவிரவாதியை சுட்டுக் கொன்று விடுகிறார்.
அதைத்தொடர்ந்து அந்த இடத்திலிருந்து வெளியே வந்த மேஜர் முகுந்த் தன் படையினரிடம் தீவிரவாதி இறந்த செய்தியையும் தன் நண்பன் வீரமரணம் அடைந்த செய்தியையும் கூறுகிறார். ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்த பிறகு தான் அவருடைய உடம்பிலும் மூன்று குண்டுகள் பாய்ந்து இருந்ததை கவனிக்கின்றனர்.
உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மேஜர் முகுந்தின் உயிர் பிரிகிறது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வீரமரணத்திற்கு தேசமே வீரவணக்கம் செய்தது. மேலும் அவரை கௌரவிக்கும் விதமாக அரசு 2015 ஆம் ஆண்டு அசோக சக்ரா விருதையும் வழங்கியது.
அப்படிப்பட்ட வீரத்திருமகனுக்கு ராயல் சல்யூட் அடிக்கும் விதமாகத்தான் அமரன் படம் உருவாகி வருகிறது. உண்மையில் இது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. நிச்சயம் இந்த கதாபாத்திரம் அவருக்கு வாழ்நாள் முழுக்க பெயர் சொல்லும் விதமாக அமையும்.
Also read: யார் வேணா என்ன வேணா ஆகலாம்.. எதிர்நீச்சல் போட்டு சாதித்த சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு