வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை மிஸ் செய்த பிரபல ஹீரோக்கள்.. ஆனாலும் சூரியை அடிச்சிக்க ஆளே இல்ல

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் போஸ் பாண்டி கதாபாத்திரத்திலும் அவருடைய நண்பராக கோடி கதாபாத்திரத்தில் சூரியும் நடித்திருந்தார்கள்.

கிராமத்து சாயலில் எடுக்கப்பட்ட இப்படம் சிவகார்த்திகேயன், சூரி இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. திரையில் இவர்கள் இணைந்து இருக்கும் காட்சிகள் அனைத்துமே திரையரங்குகளில் சிரிப்பலை ஒலித்தது. அவ்வாறு இவர்களது காம்போவில் உருவான நகைச்சுவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பல இக்கட்டான காட்சிகளிலும் ஒரு பன்ச் அடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து உள்ளார்கள். இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்களை முகம் சுளிக்காமலும், சோர்வடையாமலும் கொண்டு சென்றது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தில் முதலில் ஜீவா மற்றும் சந்தானம் தான் முதலில் நடித்துள்ளார்கள். அதன் பின் சில காரணங்களால் இவர்கள் நடிக்க முடியாமல் போக சிவகார்த்திகேயனும், சூரியும் படக்குழு தேர்வு செய்துள்ளார்கள்.

சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை படங்களில் ஜீவா, சந்தானம் கூட்டணியில் உருவான நகைச்சுவை நல்ல வரவேற்பு பெற்றாலும் கிராமத்து சாயலில் எடுக்கப்பட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர்களது நகைச்சுவை அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் சிவகார்த்திகேயன், சூரி காம்போ ரஜினிமுருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் உருவாகி இருந்தது. மீண்டும் இவர்களது காம்போவில் முழு நீள நகைச்சுவையை படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Trending News