தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு திரைப்படம் முதல்நாளிலேயே கோடிகளைத் தாண்டி வசூல் சாதனை பதித்த திரைப்படத்தைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
தமிழில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இவரின் திரைப்படங்களிலேயே முதல் நாளிலேயே தியேட்டர்களில் கோடியில் வசூல் செய்த திரைப்படத்தைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிங்கம்பட்டி ஜமீன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு வேடங்களில் மாஸாக நடித்திருப்பார். டி இமான் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் நல்ல ஒரு ஹிட் கொடுத்தன. இதனிடையே சீமராஜா திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸான முதல் நாளிலேயே 4 கோடி வரை வசூல் செய்தது.
இதுவே சிவகார்த்திகேயனின் முதல் கோடிக்கணக்கில் வசூல் செய்த திரைப்படமாம். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படம், நல்ல வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள டான் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் டான் திரைப்படம் நன்றாக அமையும் என்று தெரிவித்து வருகின்றனர்.