தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களே டாமினேட் செய்து வரும் நிலையில், தற்போது இவர்களின் வசூல் கோட்டைக்குள் சிவகார்த்திகேயனும் நுழைந்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகர்களைத் தீர்மானிப்பது அவர்களின் படங்களின் முதல் நாள் ஓபனிங், அப்படத்தின் ஓவர் சீஸ் வசூல், டிக்கெட் புக்கிங், சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் இதெல்லாம்தான் தீர்மானிக்கிறது.
இதை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் செய்து வருகின்றன. குறிப்பாக தமிழ் சினிமாவின் பென்ச் மார்க்காக ரஜினி – ஷங்கர் காம்போவில் உருவான சிவாஜி படத்துக்குப் பின் எந்திரன் அதன்பின் 2.0 படம் இடம்பிடித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து ரஜியின் ஜெயிலர் 660 கோடி வசூலித்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வேட்டையன் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், கமல்ஹாசனின் தசாவதாரம், விஸ்வரூபம் படங்களை அடுத்து, கடந்தாண்டு கமல் – லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் ரூ.500 கோடி வசூலித்தது. அதேபோல் விஜயின் லியோ படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சமீபத்தில் வெங்கட்பிரபு – விஜய் கூட்டணியில் வெளியான தி கோட் படம் 400 கோடிக்கு மேல் வசூலித்தது.
300 கோடி கிளப்பில் இணையும் சிவகார்த்திகேயன்
அதேபோல், அஜித்குமாரின் விஸ்வாசம், ஆரம்பம் ஆகிய படங்களை அடுத்து ரிலீசான வலிமை, துணிவு ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன. எனவே, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யாவின் படங்கள்தான் அடிக்கடி ரூ.100 கோடி, ரூ.200 கோடி, ரூ.250 கோடி ரூ.300 கோடி கிளப்பில் இணைந்து வந்த நிலையில், வளர்ந்து வரும் ஹீரோவாக அறியப்படும் சிவகார்த்திகேயனும் அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார்.
சிவா – சாய்பல்லவியின் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அமரன். இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று அடிப்படையில் எடுக்கப்பட்டு, அனைவரின் வரவேற்பை பெற்ற இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் வசூல் மழையில் நனைந்து வரும் நிலையில், இதுவரை இப்படம் ரூ.240 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாகவும் கங்குவா படம் வெளியாகும் வரை இப்படம் வசூல் குவியும் என்பதால் எப்படியும் ரூ.300 கோடி கிளப்பில் சிவா இணைந்தாலும் ஆச்சர்யமில்லை என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.