வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அன்றே கணித்த அஜித்.. 900 screen.. இனி இவரோட Era தான்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.  இவர் தற்போது ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.  அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட மேஜர் முகுந்தாக வாழ்ந்திருக்கிறார். 

அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  அதீதமான எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு உள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கிலும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.  சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட அமரன் திரைப்படம் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்க்கு முன்பு இவர் 100 கோடி வசூல் கொடுத்த நிலையில் இந்த படம் கண்டிப்பாக 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது.  அப்படி செய்தால் இவருக்கு தளபதி துப்பாக்கி கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிடும்

அன்றே கணித்த அஜித்…

இப்படி இருக்க, இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாவதாக படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.  மேலும் x வலைதள பக்கத்தில், தயாரிப்பு நிறுவனமும் இது தொடர்பான ட்வீட் ஒன்றை போட்டுள்ளது. 

அது மட்டுமின்றி தற்போது அமரன்தீபாவளி என்ற ஹாஷ்டாகும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு இந்த படம் பெற்றிருக்கும் நிலையில் தற்போது இதை அன்றே கணித்தார் அஜித் என்றும் சொல்லி வைரல் செய்து வருகின்றனர்.  படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தல அஜித் சொன்ன சில விஷயங்களை கூறி இருந்தார். 

அதில் முக்கியாமாக “You are in a big league” என்று கூறி இருப்பார்.  தற்போது அதை சுட்டிக்காட்டி அன்றே சிவகார்த்திகேயன் வளர்ச்சியை கணித்தார் அஜித் என்று கூறி வைரல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.  உலகம் முழுவதும் தற்போது 900 அதிகமான திரையில் வெளியாகும்போது, கண்டிப்பாக இந்த படம் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை.  மேலும் ராணுவ கதை என்பதால் வட மாநிலத்திலும் ஹிட் அடித்து சிவகார்த்திகேயன் சீக்கிரமே பான் இந்தியா ஸ்டார் ஆக நிறைய வாய்ப்புகள் உள்ளது.  

- Advertisement -spot_img

Trending News