வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

3வது குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்.. சந்தோஷத்தோடு வெளியிட்ட பதிவு

Sivakarthikeyan: பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு ஆகும்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Sivakarthikeyan
Kamal
Rajkumar Periyasamy
Sai Pallavi

இதை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23 வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கும் சந்தோஷமான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மீண்டும் அப்பாவான சிவகார்த்திகேயன்

ஏற்கனவே சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா, குகன் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அவருடைய மனைவி மூன்றாவதாக கர்ப்பம் தரித்திருக்கும் செய்தி சில நாட்களுக்கு முன்பு தான் மீடியாவுக்கு தெரியவந்தது.

sivakarthikeyan
sivakarthikeyan

அதற்கு பலரும் ஆச்சரியத்துடன் வாழ்த்து கூறி வந்த நிலையில் நேற்று இரவு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை சிவகார்த்திகேயன் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனா, குகன் இருவருக்கும் கொடுத்த அதே அன்பையும் ஆசீர்வாதத்தையும் எங்களுடைய மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பு

Trending News