வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

என்னுடைய முதல் தீபாவளி ரிலீஸ்.. பிரின்ஸ் பட ட்ரைலரை அறிவித்த சிவகார்த்திகேயன்

டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான ட்ரெய்லர் எப்போது வரும் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் பற்றிய ஒரு அறிவிப்பு வீடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதில் அவர், இதுதான் என்னுடைய முதல் தீபாவளி ரிலீஸ் படம் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். மேலும் இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read:பேராசையில் பொங்கும் சிவகார்த்திகேயன்.. அந்த ஹீரோவை ஜெயிக்கணும்னு செய்யும் தரமற்ற வேலை

அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் அவர் தெலுங்கு மொழியிலும் பேசி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி இருப்பதால் சிவகார்த்திகேயன் படத்தை தெலுங்கு திரையுலகிலும் பிரமோஷன் செய்து வருகிறார்.

மேலும் அந்த வீடியோவில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகளும் காட்டப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் பாடல்கள் என ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த ட்ரெய்லர் அறிவிப்பு வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read:ரிலீசுக்கு முன்பே 90 கோடி லாபம் பார்க்கும் சிவகார்த்திகேயன்.. சூர்யா, சிம்பு எல்லாம் ஓரமா போங்க

அந்த வகையில் பிரின்ஸ் படத்தின் டிரைலர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் நிலையில் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் தெலுங்கு பேசுவதை காணவும் அவருடைய ரசிகர்கள் ஆவலாக வெயிட் செய்து வருகின்றனர்.

Also read:40 வயது இயக்குனரை வளைத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. நடிகரின் அண்ணனுக்கு வீசிய வலை

Trending News