ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

Ayalaan Movie Review – சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. முழு விமர்சனம்

Ayalaan Movie Review : சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ஷூட்டிங் 2018 தொடங்கிய நிலையில் சில காரணங்களினால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு வழியாக இந்த பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் கடைசி நேரத்திலும் பிரச்சனையை சந்தித்த நிலையில் வெற்றிகரமாக திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். அதாவது இன்னும் ஏழு வருடங்களில் பூமியில் வாழ எனர்ஜியின் தேவை பல மடங்கு அதிகமாகும் என தெரியப்படுகிறது. அந்த சமயத்தில் ஆரியனிடம் ஒரு அபரிவிதமான கருவி கிடைக்கிறது.

அதன் மூலம் பூமியின் அடையாளத்தில் இருக்கும் வாயுவை எடுக்க முடியும். ஆனால் அப்படி எடுத்தால் பல பிரச்சனைகளை சந்திக்க கூடும். இந்த சூழலில் இதை வைத்து பெரிய அளவில் பணம் பெறலாம் என்று முதலீட்டாளர்களிடம் ஆரியன் பிசினஸ் பேசி வருகிறார். இதனால் பெரிய ஆபத்து வரும் என்பதை உணர்ந்த ஏலியன் பூமிக்கு வருகிறது.

Also Read : சிவகார்த்திகேயனின் 5 வருட கனவு.. அனல் பறக்கும் அயலான் ட்விட்டர் விமர்சனம் இதோ!

அதுவும் ஆரியனிடம் இருக்கும் கருவியை கைப்பற்ற வரும்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அப்போது தான் விவசாயியாக இருக்கும் அர்ஜுன் அதாவது சிவகார்த்திகேயன் ஏலியனுடன் இணைகிறார். அந்த சமயத்தில் அர்ஜுனுக்கு ஏலியனின் சக்தி கிடைக்கிறது.

இந்த பிரச்சினையை எப்படி மேற்கொள்கிறார் என்பது தான் அயலான் படத்தின் கிளைமாக்ஸ். இப்படி ஒரு கதையை கொடுத்ததற்கு இயக்குனருக்கு தான் முதல் பாராட்டு கொடுக்க வேண்டும். அதுவும் சிவகார்த்திகேயன் இந்த கதைக்கு பக்கவாக பொருந்தி இருக்கிறார்.

யோகி பாபுவின் காமெடியும் பக்காவாக உள்ளது. படத்திற்கு கூடுதல் சிறப்பாக ஏஆர் ரகுமானின் இசை அமைந்திருக்கிறது. மேலும் வி எஃப் எக்ஸ் வேலை தான் ஹைலைட் ஆக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த வருட பொங்கலுக்கு தித்திக்கும் சர்க்கரை பொங்கலாக சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அயலான் படம் அமைந்திருக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

Also Read : திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா அயலான்.? தொடரும் கடைசி நிமிட பரபரப்பு, சிக்கலில் சிவகார்த்திகேயன்

Trending News