வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மீண்டும் கடனாளியாக மாறும் சிவகார்த்திகேயன்.. தோல்வி பட வரிசையில் 5வது படம்

சிவகார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன்பு தொடர் வெற்றி படங்களை கொடுத்து கடனில் தவித்து வந்தார். இந்த சூழலில் டாக்டர் படம் வெளியாகி அவருக்கு ஓரளவு கை கொடுத்தது. இதைத்தொடர்ந்து வெளியான டான் படமும் நல்ல வசூலைப் பெற்று வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருந்த நிலையில் மீண்டும் கடனில் தத்தளிக்கும் அளவுக்கு தோல்வி படத்தை கொடுத்துள்ளார். அவ்வாறு சிவகார்த்திகேயனின் கேரியரில் படுதோல்வி அடைந்த 5 படங்களை பார்க்கலாம்.

காக்கி சட்டை : சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளியான திரைப்படம் காக்கி சட்டை. இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். மேலும் ஸ்ரீதிவ்யா, பிரபு போன்றோர் நடித்திருந்தனர். காக்கி சட்டை படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கியது.

Also Read :ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்.. அடிமாட்டு விலைக்கு பிசினஸ் பேசும் ஓடிடி நிறுவனம்

ஹீரோ : பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

மிஸ்டர் லோக்கல் : எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தனர். இப்படம் படுதோல்வி அடைந்து போட்ட முதலை கூட எடுக்க முடியவில்லை.

Also Read :நான் நடிக்க மாட்டேன்.. மனைவி, குழந்தைகளுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு

சீமராஜா : பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் சீமராஜா. சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சீமராஜா படத்தில் ஒன்றாக நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சிவகார்த்திகேயனின் கேரியரில் படுதோல்வி அடைந்த படம் சீமராஜா தான்.

பிரின்ஸ் : அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பிரின்ஸ். இப்படத்தின் மூலம் முதல்முறையாக சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Also Read :அஜித், விக்ரமை பார்த்து ஜெர்க்காகி ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்.. ஹாட்ரிக் வெற்றி பெறுமா பிரின்ஸ்

Trending News