தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் இவ்வளவு சாதிக்க முடியும் என பலருக்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் உள்ளார்.
தற்போது இவர் டான் மற்றும் அயலான் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயன் பல படங்களை தயாரித்து வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் படங்கள் வரவேற்பைப் பெறாததால் கடனுக்கு வட்டி கட்டி வருவதாக தகவல் வெளியானது. உதாரணமாக தனது 24 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை.
ஆனால் டாக்டர் படத்தின் வெற்றியின் மூலம் ஓரளவுக்கு கடனை சமாளித்துள்ளார் சிவகார்த்திகேயன் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது சொந்த ஊரிலேயே பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார். இந்த புதுமனை புகுவிழா மிக விமர்சையாக நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் இதைப்பார்த்த பலர் வாய்கூசாமல் கடன் கடன் என கூறி வரும் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார். மேலும் கடன் என்று சொல்வதெல்லாம் வெளி உலகத்தை நம்ப வைப்பதற்காக மட்டும் தான் எனவும் ஆனால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி அதன் மூலம் நிறைய சம்பாதிக்கிறார்.
இதுதவிர தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு லாபத்தையும் மற்றும் தனது நெருங்கிய நண்பரைப் வைத்து தன்னுடைய படத்தை தயாரித்து அதிலும் லாபம் பார்த்து வருகிறார் சிவகார்த்திகேயன் என சிலர் கூறிவருகின்றனர். ஆனால் சிலர் மிகக் குறுகிய காலத்திலேயே இவ்வளவு உயரத்தை அடைந்த சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.