ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

கோலிவுட்டை சிவகார்த்திகேயன் கையில் ஒப்படைத்த விஜய்.. தளபதி இடத்திற்கு கோட் படத்தில் கிடைத்த விடை

Sivakarthikeyan: இன்று விஜய்யின் கோட் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் திருவிழா கோலம் போல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் இடத்திற்கு அடுத்தது சிவகார்த்திகேயன் தான் வரப்போகிறார் என்பதை சூசகமாக கோட் படத்தில் சொல்லி உள்ளனர்.

விஜய் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கி செயல்பட இருக்கிறார். இதனால் சினிமாவில் தளபதி இடத்தில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அஜித்தும் அந்த இடத்திற்கு வருவது சந்தேகம்தான்.

ஏனென்றால் அவர் நடிப்பில் உருவான விடாமுயற்சி படமே இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதோடு அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்த கையோடு உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அடுத்த தலைமுறை நடிகர்கள் தான் தளபதி இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

விஜய் இடத்திற்கு வந்த சிவகார்த்திகேயன்

அந்த வகையில் சிவக்கார்த்திகேயன், தனுஷ், சிம்பு இவர்களுள் யாராவது தான் தளபதி இடத்தில் வருவார்கள் என பலரும் கூறி வந்தனர். ஆனால் தளபதி விஜய் கோலிவுட்டை சிவகார்த்திகேயன் கையில் ஒப்படைத்து செல்கிறார்.

அதாவது கோட் படத்தில் ஒரு காட்சியில் தன்னுடைய துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்து செல்லும்படி ஒரு காட்சி அமைந்திருக்கும். அந்த வகையில் வெங்கட் பிரபு மறைமுகமாக விஜய் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்கு செல்கிறார் போல தான் அந்த காட்சியை வடிவமைத்திருக்கிறார்.

மேலும் விஜய்யின் கோட் படம் வெளியான இன்று சிவகார்த்திகேயன், அஜித், ரஜினி என அனைத்து தரப்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. வெங்கட் பிரபு, விஜய்க்கு ஒரு தரமான ஹிட் படத்தை கோட் படம் மூலம் கொடுத்திருக்கிறார்.

கோலிவுட்டில் உயரும் சிவகார்த்திகேயன் மார்க்கெட்

Trending News