நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தான் முதலில் நடித்த திரைப்படமான மெரினா திரைப்படத்திற்கு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக இயக்குனர் பாண்டிராஜிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆனால் தற்போது 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே டான் திரைப்படத்தில் வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தில் கலக்கி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவோடு ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படம் பெரும் அளவில் வசூல் சாதனையும் பெருமளவில் வெற்றியும் அடையவில்லை.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக பேசப்பட்டுள்ளது. ஆனால் 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளனர். தற்போது நான்கு வருடமாக தனக்கு கொடுக்க வேண்டிய 4 கோடி ரூபாயை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் என்று கூறி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சிவகார்த்திகேயன் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்த சிம்பு மற்றும் விக்ரம் படத்தையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உதவியுள்ளார். இதனால் சிம்புவுக்காக சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுப்பாரா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் சிவகார்த்திகேயன் இந்த வழக்கில் தனக்கு கொடுக்க வேண்டிய 4 கோடி ரூபாயை கொடுக்கவில்லை என்றால் அவர் தயாரித்த எந்த ஒரு படத்தையும் தன்னுடைய அனுமதி இல்லாமல் வெளியிடக்கூடாது தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அதனால் ஞானவேல்ராஜா தயாரித்த எந்த ஒரு படமும் வெளியாகாது எனவும் கூறி வருகின்றனர். ஞானவேல் ராஜா சூர்யாவின் நெருக்கமான உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.