Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் காட்டில் அடை மழை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தரமான இயக்குனர்கள் அவருக்கு அடுத்தடுத்து கதை சொல்லி வருகிறார்கள்.
அதில் முக்கியமான மலையாள இயக்குனர் ஒருவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து இருக்கிறார். 2018 என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து ஜோசப் ஆண்டனி தான் அந்த இயக்குனர்.
தரமான சம்பவம் லோடிங்!
2018 படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இவர் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிய ஒப்பந்தமானார்.
அப்போது வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இந்த கதையை சிம்புவை வைத்து பண்ண இருந்தார்கள்.
அதன் பின்னர் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிம்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அந்த கதையில் நடிகர் ஆர்யா ஒப்பந்தமாக இருக்கிறார்.
நாளடைவில் இந்த ப்ராஜெக்ட் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்திடம் மாறி இருக்கிறது. அந்த நிறுவனம் சிவகார்த்திகேயனை வைத்து இந்த கதையை எடுக்க விரும்புகிறார்களாம்.
இயக்குனருக்கு நடிகர் ஆர்யாவை விட விருப்பமில்லை. அதனால் ஆர்யாவிடம் பேசி இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புதல் வாங்கி இருக்கிறார்கள். ஜெயம் ரவியை தொடர்ந்து தற்போது ஆர்யா சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.