வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சும்மா இருந்த சிவகார்த்தியேனை சொறிஞ்சு விட்ட தளபதி.. அடுத்த விஜய்னு சொன்னது ஒரு குத்தமா

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே அடுத்த விஜய் இவர்தான் என்ற பேச்சு தொடங்கியது. அதோடு சிவகார்த்திகேயனை தளபதி விஜய் ஒரு முறை புகழ்ந்து பேசினார். அதாவது எப்போதுமே அதிக குழந்தைகள் ஃபேன்ஸ் விஜய்க்கு தான் இருக்கும். அந்த இடத்தை சிவகார்த்திகேயன் வந்த புதிதிலேயே பிடித்து விட்டார்.

அதன் பிறகு சமீபகாலமாக சருகளை சந்தித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது கைவசம் நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார். அதுவும் விஜய் பட இயக்குனருடன்தான் பெரும்பாலான படங்களில் கூட்டணி போட்டிருக்கிறார்.

ஏஆர் முருகதாஸ் உடன் இப்போது ஒரு படம் பண்ணுகிறார். அடுத்ததாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று சும்மா இருந்தவரை சொரிந்து விட்டு விட்டனர் ரசிகர்கள். அதாவது விஜய் அடிக்கடி தனது ரசிகர் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்.

விஜய்யின் பாணியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்

மேலும் தனது ரசிகர் கூட்டத்தை பலமாக்கி இப்போது அரசியலிலும் களம் இறங்கி விட்டார். அதேபோல் இப்போது சிவகார்த்திகேயனும் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ரசிகர்களை ஒன்று திரட்டி சந்தித்திருக்கிறார். எனவே சிவகார்த்திகேயனும் இப்போது அரசியலில் தான் இறங்கப் போகிறார்.

ஏனென்றால் இப்போது சினிமாவில் ஜெயிப்பதெல்லாம் மிகவும் கடினமாகிவிட்டது. மேலும் அரசியல் நன்றாக பேச்சுத் திறமை இருந்தாலே கண்டிப்பாக பெரிய இடத்தை பிடித்துவிடலாம். தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு இதெல்லாம் கைவந்த கலை.

அதுவும் மக்களுக்கு பிடித்த மாதிரி பேசக்கூடியவர். எனவே அடுத்த விஜய்யின் சும்மா சொல்லி இவரை உசுப்பேத்தி விட்டு இப்போது அவரின் பாணியை பின்பற்றி வருகிறார். ஆகையால் விரைவில் விஜய்யின் வரிசையில் சிவகார்த்திகேயனும் கட்சி தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

விஜய்யின் வரிசையில் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan
sivakarthikeyan

Trending News