வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

துப்பாக்கி கொடுத்தவருக்கே விபூதி அடித்த SK.. யப்பா! இவரு பயங்கரமான ஆளா இருக்காரே!

Sivakarthikeyan: துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு, சமீப காலமாக சிவகார்த்திகேயன் சந்தித்து வரும் முக்கியமான கேள்வி இது. கோட் படத்தில் கிட்டத்தட்ட எனக்கு பிறகு சினிமாவில் நீதான் என விஜய் சொல்லும் அளவுக்கு சிவகார்த்திகேயனுடன் அந்த காட்சி இருந்தது.

அதன் பின்னர் ஒரு சிலர் நிஜமாகவே இவர் தான் அடுத்த தளபதியா இருக்குமோ என்று கூட நம்ப ஆரம்பித்து விட்டார்கள். தளபதியை தாண்டி சிவகார்த்திகேயன் தான் ஒரு சாணக்கியன் என்பதை நிரூபித்து விட்டார். சிவகார்த்திகேயனை கேமியோ ரோலில் கொண்டு வந்து, விஜய்க்கு இப்படி ஒரு வசனத்தை வைத்தது வெங்கட் பிரபு தான்.

அடுத்து சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தில் நடிக்கப் போகிறார் என்ற நம்பிக்கையில் தான் வெங்கட் பிரபு இப்படி ஒரு காட்சியை வைத்தார். ஊருக்கே விபூதி அடிக்கும் வெங்கட் பிரபுவுக்கு பட்ட நாமம் அடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

உலக நாயகன் கமலஹாசனின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதை என்பதால் இந்தப் படம் 100% வெற்றி பெறும் என்பது ரிலீசுக்கு முன்பே உறுதியாகிவிட்டது.

துப்பாக்கி கொடுத்தவருக்கே விபூதி அடித்த SK

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து பணிபுரிவார் என சொல்லப்பட்டது. அதற்குள் சூர்யாவின் சூப்பர் ப்ராஜெக்ட் களில் ஒன்றான புறநானூறு சிவகார்த்திகேயன் வசம் வந்துவிட்டது.

சிவகார்த்திகேயனுக்காக இயக்குனர் சுதா கொங்கரா ஸ்கிரிப்ட் தயார் பண்ணி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். இதனால் முதலில் சிவகார்த்திகேயன் புறநானூறு படப்பிடிப்பில் தான் கலந்து கொள்ள இருக்கிறார். அது முடிந்த பிறகு சிபிச் சக்கரவர்த்தியுடன் இணையும் பட வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறதாம்.

இதனால் இப்போதைக்கு சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் உறுதியாக சொல்கிறது. எப்படியும் அடுத்த படம் நமக்கு தான் என்ற கனவு கோட்டையில் விஜய் வாயாலேயே நீதான் சினிமாவை பார்த்து கண்ணு சொல்ல வைத்தார் வெங்கட் பிரபு. ஆனா என் ஸ்கெட்ச் தளபதி இடத்துக்கு இல்ல அதையும் தாண்டியது என நிரூபித்து விட்டார் சிவகார்த்திகேயன்.

Trending News